இஞ்சித் துவையல் சாப்பிடுவதால் இப்படி ஒரு நன்மையா.!
இஞ்சித் துவையல் சாப்பிடுவதால் இப்படி ஒரு நன்மையா.!
பொதுவாக நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் இஞ்சியில் வைட்டமின் ஈ, சி, பி6, பி12, கால்சியம், பொட்டாசியம் உள்ளிட்ட பல சத்துக்கள் அடங்கியுள்ளன.
இஞ்சியைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். பசியுணர்வு அதிகரிக்கும். இஞ்சியை அரைத்து நெற்றியில் பத்து போட்டால் ஒற்றைத் தலைவலி நீங்கும். இப்படிப்பட்ட இஞ்சியை எப்படி துவையல் செய்யலாம் என்று பார்ப்போம்..
முதலில் இஞ்சியை தோல்நீக்கி சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, இஞ்சித்துண்டுகளை தனித்தனியாகப் போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவேண்டும்.
அதனுடன் வெல்லம், புளி , துருவிய தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்து வைத்த கலவையை சேர்த்து இறக்கினால், சுவையான சத்தான இஞ்சித்துவையல் ரெடி.