குளிக்கும் தண்ணீரில் கொஞ்சம் உப்பு சேர்த்தால் இவ்வளவு நன்மைகளா? படித்து பயன்பெறுங்கள்!
Health tips for bathing with salt in tamil

உப்பு என்பது மனிதனின் வாழ்வில் மிக முக்கியமான ஓன்று. உப்பில்லா பண்டம் குப்பையிலேயே என பழமொழி கூட உண்டு. உணவில் உப்பு சற்று குறைந்துவிட்டாலும் சரி, அதிகமாகிவிட்டால் சரி இரண்டுமே ருசிப்பதில்லை. உப்பு அளவோடு இருந்தால்தான் உணவும் சரி, மனிதனின் உடலும் சரி ஆரோக்கியமாக இருக்கும்.
அதேபோல், சாப்பாட்டில் மட்டும் இல்லாது நாம் குளிக்கும் தண்ணீரிலும் கொஞ்சம் உப்பு சேர்த்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்கிறது ஆராய்ச்சி. வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் உப்பு சேர்த்து குளித்தால் உடலில் இருக்கும் தோல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும். குறிப்பாக சொறி சிரங்கு இருப்பவர்கள் இப்படி செய்தால் கிருமிகள் அழிந்துவிடும்.
மேலும், சருமத்தில் அரிப்பு, எரிச்சல் இருப்பவர்கள் தண்ணீரில் சிறிது உப்பு காலத்து குளிப்பதன் மூலம் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். நீரில் உப்பு சேர்த்து குளித்தால் அன்றைய நாள் சுபமாகும் என்பது ஜதீகம்.