கணவன், மனைவியாக சேர்ந்து மது அருந்தினால் இவ்வளவு நன்மைகளா.! ஆய்வின் முடிவில் வெளியான தகவல்.!?
கணவன், மனைவியாக சேர்ந்து மது அருந்தினால் இவ்வளவு நன்மைகளா.! ஆய்வின் முடிவில் வெளியான தகவல்.!?
தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் மது பழக்கத்திற்கு பல ஆண்கள் அடிமையாகி விட்ட சூழ்நிலையில் தற்போது உள்ள பெண்களும் மது பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். ஆல்கஹால் உடலில் செல்வதால் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பலவிதமான மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இருப்பினும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தும் கணவன் மனைவிகளுக்கு இடையே பிரச்சனைகள் குறைந்து பல நன்மைகள் ஏற்படுவதாக ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த ஆய்வானது மது குடிப்பதை ஊக்குவிக்கவில்லை. இதற்கு மாறாக தம்பதிகளுக்கு இடையேயான ஒரே மாதிரியான பழக்கங்களை பகிர்ந்து கொள்வதை குறித்து கூறி வருகிறது. கடந்த 20 வருட காலங்களாக 4500 ஜோடிகளை முன்னிலைப்படுத்தி மேற்கொண்ட ஆய்வில் ஒரே மாதிரியான பழக்கவழக்கங்களை, குறிப்பாக மது பழக்கத்தை கொண்டுள்ள தம்பதியர்களுக்கு இடையில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் அதிகரிப்பதாக கூறியுள்ளனர்.
மேலும் இதற்கு முன்னதாக மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தம்பதியர்கள் ஒன்றாக மது அருந்தும் போது நீண்ட நாட்கள் ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாகவும் உயிர் வாழ்ந்ததாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இந்த ஆராய்ச்சி குடி கூட்டு கோட்பாடு என்று அழைக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆராய்ச்சியின் முடிவில் கணவன், மனைவி இரண்டு பேரில் ஒருவர் மட்டும் குடிப்பழக்கத்தை கொண்டவர்களின் வாழ்க்கையில் எதிர்மறையான ஆற்றல்கள் நிலவியுள்ளது. மேலும் அவர்களின் திருமண வாழ்க்கையில் திருப்தி இல்லாமலும் இருந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து பேசிய டாக்டர் பிரடிட் என்பவர், ஒன்றாக மது அருந்தும் தம்பதியினர்கள் மற்ற தம்பதியினர்களை விட நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்ததாக கூறியுள்ளார்.