×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சாக்லேட் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? உடனே படியுங்கள்!

healthy tips

Advertisement

குழந்தைகள்முதல் பெரியவர்கள்வரை அனைவரும் விரும்பும் இனிப்பு பண்டம், சாக்லேட். சாக்லேட் மூளையில் மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோனான செராட்டினான் உற்பத்தியை அதிகரிக்கிறது. மூளையை சுறுசுறுப்பாக்கி சோர்வை நீக்க உதவுகிறது. 

சில வகை சாக்லேட்கள் கசப்புத்தன்மையுடன் இருக்கும். எப்படி இருந்தாலும் சாக்லேட்கள் உண்ணும் போது உடலுக்கு ஒரு ரிலாக்ஸ் உணர்வு கிடைக்கிறது. அதிலும் இந்த டார்க் சாக்கலேட்களுக்கு உடலையும் மனதையும் புத்துணர்ச்சியுடன் வைக்கும் தன்மை இருக்கிறது. 

வயதாவதால் மூளைக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு டார்க் சாக்லேட் உண்பது தீர்வாக அமைய வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. முதியவர்களுக்கு மூளையில் ஏற்படும் அழுத்தமும், வீக்கமும் தான் அல்சைமர் போன்ற நோய்க்கு காரணமாக அமைகிறது. கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள், எலிகள் மீது நடத்திய ஆராய்ச்சியில், எபிகேடசின் என்ற பொருள் டார்க் சாக்லேட்டில் உள்ளதாகவும், அது இந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைவதாகவும் கண்டுபிடித்துள்ளனர். 

ஒரு கடி அளவு சாக்லெட் உங்களுக்கு 150 அடிகள் நடக்கும் ஆற்றலைத் தரும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே விலை அதிகமாக இருந்தாலும் தரமான சாக்லேட் சாப்பிடுவது நல்லது. இதில் சாக்லேட்டின் கசப்பு சுவை அதிகமாக இருக்கும். விலை மலிவான சாக்லேட்களில் சாக்லேட் அளவு குறைக்கப்பட்டு சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#saklate #benifits
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story