×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி? தாமதப்படுத்துவது எப்படி?

home remedies to post and prepone your periods

Advertisement


ஒவ்வொரு பெண்ணும் ஏதாவது ஒரு சமயத்தில் தனது மாதவிடாயை சில நாட்கள் சீக்கிரமாக அல்லது தாமதமாக வரவைக்க விரும்புவார்கள். அதற்கு காரணம் பூஜை அல்லது பண்டிகைள், திருமணங்கள் போன்ற விசேஷங்கள் தான் காரணம்.

பூஜை என்று வரும் போது மாதவிடாய் பெண்கள் அதற்கு தடை செய்யப்பட்டவர்கள் என கருதுகிறார்கள். அதுபோல திருமணங்கள், இல்ல விழாக்கள், கோவில் திருவிழாக்கள் போன்றவற்றில் கலந்துகொள்வதற்காக, மாதவிடாயை சில நாட்கள் சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ வரவைக்க பெண்கள் நினைப்பார்கள். அதனை இயற்கை உணவு முறை மூலமாக செய்யலாம்.

அந்தவகையில், உடலில் உஷ்ணத்தை உருவாக்கும் உணவை உட்கொண்டால் உங்கள் மாதவிடாய் சுழற்சியை விரைவில் வரவழைக்க காரணமாக இருக்கும்.  

விரைவில் மாதவிடாய் வரவழைக்க சாப்பிடவேண்டிய உணவுகள்:

*பப்பாளி: இது உடலில் அதிக வெப்பம் உருவாக்கி மாதவிடாயை விரைவில் வரவழைக்க மிகவும் பயனுள்ள எளிய முறையாகும். அதுமட்டுமின்றி பப்பாளியில் அதிக அளவில் சத்துக்கள் உள்ளது இதனால் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஆரோக்கியத்தை தரும்.

*ஓம விதைகள்: ஓம விதைகளை தண்ணீரில் ஊறவைத்து மூன்று நாட்களுக்கு ஒரு டம்ளர் குடிப்பது உங்கள் மாதவிடாயை சில நாட்கள் முன்னால் வரவழைக்க உதவும்.

*எள்: எள் விதையை வெல்லத்துடன் சேர்த்து, மாதவிடாய் தேதிக்கு 15 நாடகளுக்கு முன் சாப்பிட்டால் விரைவில் மாதவிடாய் வரவழைக்க உதவும்.

*அன்னாசி:  இது உடலில் அதிக அளவு உஷ்ணத்தை தூண்டக் கூடிய ஒரு சிறந்த உணவுகளில் ஒன்றாகும். அது  விரைவில் மாதவிடாய் வரவழைக்க உதவும்.

மாதவிடாய் தாமதமாக வரவழைக்க சாப்பிடவேண்டிய உணவுகள்:

*வெந்தயம்: மாதாந்திர விலக்கு வர வாய்ப்புள்ள ஐந்து நாட்களுக்கு முன்னால் இருந்தே, சிறிது வெந்தயத்தை எடுத்து, வாயில் இட்டு தண்ணீர் பருகி வர, விலக்கு தள்ளிப் போகும். 

*வெள்ளரி: மாதாந்திர விலக்கு வர வாய்ப்புள்ள ஐந்து நாட்களுக்கு முன்னால் இருந்தே வெள்ளரிப் பிஞ்சுகளை உட் கொண்டு வரலாம், இதன் மூலம், உடல் சூடு குறைந்து, விலக்கு தள்ளிப் போகும்.

*பொட்டுக்கடலை: பொட்டுக் கடலையை, காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில், நன்கு மென்று தின்று, தண்ணீர் பருகி வந்தால் மாதவிடாயை தள்ளிபோடலம்.


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#health tips #home remidies
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story