வீடே மணக்கும் சிக்கன் கிரேவி.. இந்த மசாலாவை யூஸ் பன்னுங்க.. அசத்தலா இருக்கும்.!
இந்த குளிருக்கு மணக்க மணக்க சிக்கன் கிரேவி செஞ்சு அசத்துங்க... டேஸ்ட் சும்மா வேற லெவல்... உடனே டிரை பண்ணுங்க..!
இந்த மழைக்கு சுட சுட சிக்கன் கிரேவி செய்து சாதம் அல்லது சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். அப்படிப்பட்ட, சுவையான சிக்கன் கிரேவி எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
முதலில் மசாலா தூள் தயார் செய்யும் முறை பற்றி பார்ப்போம்.
மசாலா தூள் செய்ய தேவையானப் பொருட்கள் :
மிளகு - 2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 5
சோம்பு - 1 தேக்கரண்டி
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 4
மசாலா தூள் செய்முறை :
முதலில் அடுப்பைப் பற்ற வைத்து ஒரு வாணலியை வைக்கவும். பின்பு, அதில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அளவுகளின் படி மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், சோம்பு, பட்டை, கிராம்பு சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு, அதை ஆற வைத்து ஒரு மிக்ஸி கப்பில் சேர்த்து நன்றாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இதையும் படிங்க: இந்த மாதிரி நாவூறச்செய்யும் வத்தல் குழம்பு சாதம்.. சொக்கி போக செய்யும் சுவையில் செய்யலாம் வாங்க.!
சிக்கன் கிரேவி செய்ய தேவையானப் பொருட்கள் :
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
பிரியாணி இலை - 1
பட்டை - 1 சிறிய துண்டு
சின்ன வெங்காயம் - 15 ( நறுக்கியது )
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 2 ( நறுக்கியது )
மல்லித் தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சிக்கன் - 1 கிலோ
கருவேப்பிலை - 2 கொத்து
கொத்துமல்லி தழை - ஒரு கைப்பிடி
தண்ணீர் - 1 கப்
செய்முறை :
முதலில் அடுப்பைப் பற்ற வைத்து ஒரு கடாயை வைக்கவும். பின்பு, அதில் 3 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் 1 பிரியாணி இலை, 1 பட்டை சேர்த்து பொரிந்ததும் மேலே கொடுக்கப்பட்டுள்ள அளவுகளின் படி சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதன் பிறகு, இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், தக்காளி, கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின்பு அதில் சுத்தம் செய்த 1 கிலோ சிக்கன் சேர்த்து கிளற வேண்டும். ஒரு 5 நிமிடம் வேக வைத்து பிறகு அடுப்பு தீயை குறைவாக வைத்துவிட்டு அதில் அரைத்து வைத்த மசாலா தூள், மல்லித் தூள், கரம் மசாலா தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும். பின்பு அதில் 1 கப் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். இறுதியாக ஒரு கைப்பிடி கொத்துமல்லி தழை தூவி இறக்கினால் சூடான, சுவையான சிக்கன் கிரேவி தயார்.
இதையும் படிங்க: பாய் வீட்டு, சீக்ரெட் மசாலா.. இதுல ஒரு ஸ்பூன் சேர்த்தால் உங்க பிரியாணியும் பிரமாதம் தான்.!