எப்போ கோவமாக இருந்தாலும் இத மட்டும் பண்ணுங்க! மொத்த கோவமும் போய்டும்!
how to avoid angry
தற்போதைய சூழ்நிலையில் அனைவருக்கும் விரைவில் வந்துவிடும் ஒரு குணம் என்றால் அது கோபம் தான். சிலருக்கு பிடிக்காதவர்கள் நன்மைகள் செய்தலே கோபம் தான் வரச்செய்கிறது. எவ்வளவு தான் அளவுக்கு அதிகமாகக் கோபப்படுகிறவர்களாக இருந்தாலும் ஒரு சில விஷயங்களில் அதனை கட்டுப்படுத்தலாம்.
காதலர்களாக இருந்தாலும் சரி, நண்பர்களாக இருந்தாலும் சரி, கணவன் மனைவியாக இருந்தாலும் சரி ஆண், பெண் இரண்டு பேருமே தங்களுடைய ஈகோவின் காரணமாக சண்டை போட்டுக் கொண்டிருந்தால், அந்த ஈகோவை விட்டுக் கொடுத்துவிட்டால் பெண்கள் ரொம்ப ஈஸியாக ஆண்களைத் தங்கள் வசமாக்கிவிடுவார்கள்.
பொதுவாக ஆண்கள் வெளியில் இருந்து வீட்டிற்கு வரும்பொழுது ஏராளமான பிரச்சனைகளுடன் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே வீட்டில் ஆயிரம் பிரச்னை இருந்தாலும் ஆண்கள் வீட்டிற்கு வந்தவுடனே அதனை ஆரம்பிக்க துவங்காதீர்கள். அவர்கள் வெளிப்பிரச்னைகளை மறந்த பிறகு வீட்டில் உள்ள பிரச்சனைகளை கூறுங்கள். அப்பொழுதுதான் இருவருக்குமே நிம்மதி கிடைக்கும்.
உச்சகட்ட கோவத்தில் இருக்கும் ஆண்களை தாஜா பண்ணி, அவர்களுடைய கோபத்தை சுக்குநூறாக உடைப்பதற்காகவே பெண்கள் சில டெக்னிக்குகளை தங்கள் வசம் வைத்திருக்கிறார்கள். கணவன் எவ்வளவு கோவமாக இருந்தாலும் துணைவியார் கணவனை கட்டியணைத்து எந்த பிரச்சனையாக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் ப்ரீயா இருங்கனு சொல்லி பாருங்க... மனுஷன் எல்லாத்தையும் மறந்து நார்மலாகிவிடுவான்.
அதேபோல் மனைவி மீதே உச்சகட்ட கோவத்தில் இருக்கும் ஆண்கள், அவர்களிடம் மேலும் பேச்சை தொடராமல் குளிர்ந்த நீரை அதிக ளவு குடித்துவிட்டு படுத்துவிடுங்கால் மறுநாள் இருவரும் புது கணவன் மனைவி போலவே பேசிக்கொள்வீர்கள். பொதுவாகவே கோபம் யாருக்கு வந்தாலும் சற்று நேரம் அமைதியாக இருங்கள் எல்லாம் சரியாகிவிடும். கோவத்தில் எது பேசினாலும் அது பிரச்சனையில் தான் முடியும்.