×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குட்மார்னிங் டிப்ஸ்: எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை டூத் பிரஷை மாற்ற வேண்டும் தெரியுமா?

How to brush in proper way and how long can use a brush

Advertisement

பொதுவாக ஒரு நாளைக்கு இருமுறை பல் துலக்குவது நல்லது. அதிலும் குறிப்பாக  ஒரு நாளில் எத்தனை முறை பல் துலக்குவது என்பதைவிட, எப்படி முறையாக பல் துலக்குவது என்பது மிகவும் முக்கியமான ஓன்று.

முதலில் பல் துலக்குவதற்கு பிரஷ் தேர்வு செய்யும்போது, மிகக்கடினமாக இல்லாமல், சாப்டாக இருக்கும் பிரஸ்களை தேர்வு செய்வதே சிறந்தது.

மேலும் பல் துலக்கும்போது, நீளவாக்கில் தேய்க்காமல், மேலும், கீழுமாய் தேய்க்க வேண்டும். ஏனெனில் நீளவாக்கில் தேய்க்கும்போது, பற்களில் தேய்மானம் அதிகம் ஏற்பட்டு, விரைவில் பல் கூச்சம் வரும். பற்கள், ஈறுகள் மற்றும் நாக்கு என வாயின் அனைத்து பகுதிகளையும் கவனித்து சுத்தம் செய்வது முக்கியமானது.

குறிப்பாக 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை பிரஷ்ஷை மாற்ற வேண்டும். “புளூரைடு’ உள்ள பேஸ்ட் கொண்டு பல் துலக்குவது நல்லது.

பற்களில் கூச்சம் இருந்தால் அதற்கான பிரத்யேகமான பேஸ்ட் பயன்படுத்த வேண்டும். சரியான பராமரிப்பின் மூலம் பற்சொத்தை வருவதை குறைக்கலாம்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#health tips #Tooth brush #Brushing tips
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story