×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பெண்களே மார்பக தளர்ச்சி பிரச்சனையா?.. இயற்கை முறையில் மார்பக தளர்ச்சியை சரிசெய்வது எப்படி?.!

பெண்களே மார்பக தளர்ச்சி பிரச்சனையா?.. இயற்கை முறையில் மார்பக தளர்ச்சியை சரிசெய்வது எப்படி?.!

Advertisement

பெண்கள் குழந்தையை பிரசவித்த பின்னர் மார்பகம் தளர்வடையும் பிரச்சனையை சந்திக்கின்றனர். இது குழந்தை பால் குடிப்பதால் ஏற்படும் மாற்றம் என்றும் கூறலாம். அதனைப் போல உடல் எடை அதிகரித்தல், வயது காரணமாக மார்பக தளர்ச்சியானது ஏற்படுகிறது. இதனை தவிர்க்க உள்ளாடை சௌகரியமாக இருக்கும் வகையில் அணிய வேண்டியதும் அவசியமாகிறது. 

இனி மார்பகங்கள் தளர்வடைவதில் இருந்து பாதுகாக்கும் இயற்கை முறைகள் குறித்து காணலாம். 

உடற்பயிற்சி - புஜங்காசனம் : 

புஜங்கா என்றால் பாம்பு என்று பொருள். இதில் பாம்பு எப்படி படம் எடுக்குமோ அதனைப் போல செய்யப்படும் ஆசனம் புஜங்காசனம் என்று அழைக்கப்படுகிறது. எளிமையான அனைவராலும் செய்யக்கூடிய ஆசனமாகவும் இது இருக்கிறது. இந்த ஆசனம் முதலில் குப்புற படுத்துக்கொண்டு கால்களை நீட்டி, பின்னர் கைகள் இரண்டும் பக்கவாட்டு பகுதியில் இருக்க வேண்டும். 

அதனை தொடர்ந்து தோள்பட்டைக்கு அருகில் கைகளை வைத்து மெதுவாக மூச்சை இழுத்தவாறு தலை, தோள்பட்டை, மார்பகம் வயிற்று பகுதிகளை தூக்கினால், உடலின் இடுப்பு, தொடை, கால் தரையில் இருக்குமாறு பார்க்க வேண்டும். இவ்வாறாக 10 நொடிகள் மூச்சை பிடித்து பின்னர் மெதுவாக மூச்சை தரையில் விட்டு பின் இயல்பு நிலைக்கு படுக்க வேண்டும்.

புஜங்காசனம் செய்யக்கூடாத நபர்கள் :

முதுகு தண்டுவடத்தில் பிரச்சனை உள்ளவர்கள், கர்ப்பிணிப்பெண்கள், தலைவலி, வயிற்றில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் போன்றவர்கள் புதங்காசனாவை தவிர்க்கலாம். அதைப்போல குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், பிரசவம் நடந்த ஒரு வருடம் கழித்து இதனை மேற்கொள்வது நல்லது. புஜங்காசனம் செய்வதால் பெண்களிடையே காரணம் மார்பகம் இறுக்கமாகிறது. 

பனிக்கட்டி வைத்து ஒத்தடம் கொடுத்தல் :

பனிக்கட்டி வைத்து ஒத்தடம் கொடுப்பதால் தளர்ந்த மார்பக தசைகளானது இறுக்கம் பெற்று மார்பக தளர்ச்சி சரியாகிறது. இதற்கு இரண்டு பனிக்கட்டியை துணியில் வைத்து மார்பகத்தில் ஒரு நிமிடம் வரை மசாஜ் செய்யலாம். 

ஆலிவ் எண்ணெய் :

ஆலிவ் எண்ணெய் ஊற்றி 15 நிமிடம் மசாஜ் செய்தால் மார்பகத்தின் ரத்த ஓட்டம் அதிகரித்து, மார்பகத்தில் உள்ள தசை மற்றும் சருமச்செல்கள் புத்துணர்ச்சியடையும். இதனை போல மாதுளை விதை எண்ணை, அவகோடா எண்ணெயையும் பயன்படுத்தலாம். 

ஹெர்பல் மாஸ்க் :

ஹெர்பல் மாஸ்க் முட்டையின் மஞ்சள் கருவுடன், வெள்ளரிக்காயை அரைத்து கலவையாக எடுத்துக்கொண்டு, அதனை மார்பகத்தில் பூசி 30 நிமிடம் கழித்து கழுவி வந்தால் மார்பக தசைகள் இறுக்கமாகிறது. இதனை போல வெந்தயத்தை ஊற வைத்து அரைத்தும் பூசி மார்பகத்தை பாதுகாக்கலாம். 

பின்குறிப்பு :

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் சமயத்திலும், பாலூட்டும் போதும் டயட் போன்றவற்றை மேற்கொள்ளக்கூடாது. இந்த சமயங்களில் உடலுக்கு நல்ல சத்துள்ள ஆகாரங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். முடிந்தால் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளலாம். நிமிர்ந்து அமர வேண்டும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Breast #Breast Sagging #Tips #Ladies Corner
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story