புளித்த மாவில் புளிக்காத இட்லி, தோசை செய்வது இவ்வளவு ஈஸியா.?! இப்பவே டிரை பண்ணுங்க.!
புளித்த மாவில் புளிக்காத இட்லி, தோசை செய்வது இவ்வளவு ஈஸியா.?! இப்பவே டிரை பண்ணுங்க.!
நாம் அன்றாட வாழ்வில் அதிகம் உண்ணும் உணவு இட்லி, தோசை தான். அந்த இட்லி மாவை புளித்து விட கூடாது என்பதற்காக, குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பயன்படுத்துவோம். ஆனால், இவ்வாறு செய்வது, உடலுக்கு நல்லதல்ல. ஆகையால் முடிந்தவரை அதனை தவிர்க்க வேண்டும்.
குளிர்சாதனப் பெட்டியில் மாவை வைத்தாலும் கூட 2, 3 நாட்களில் புளித்துப் போய்விடும். அவ்வாறு, புளித்த மாவை சரி செய்ய சில குறிப்புகளை இப்பதிவில் காண்போம்.
குறிப்பு 1 :
தேவையானப் பொருட்கள் :
சர்க்கரை - அரை டீ ஸ்பூன்,
கடலைமாவு - ஒன்றரை டீ ஸ்பூன்,
வெண்ணெய் - ஒரு டீ ஸ்பூன்.
இதையும் படிங்க: சுவையான வெண்டைக்காய் மோர்க்குழம்பு செய்வது எப்படி? அசத்தல் டிப்ஸ் உள்ளே.!
ஒரு பாத்திரத்தில் மேலே கொடுக்கப்பட்ட அளவுகளில் சர்க்கரை, கடலைமாவு மற்றும் வெண்ணெய் ஆகிய மூன்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும். இதில் சிறிது தண்ணீர் விட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும். இந்த கலவையை புளித்த மாவுடன் சேர்க்கவும். அதன் பின், நன்றாக கலக்கவும். இப்போது இந்த மாவில் தோசை அல்லது இட்லி செய்து சாப்பிடலாம், புளித்த வாசனையே சுத்தமாக இருக்காது.
குறிப்பு 2 :
தேவையானப் பொருட்கள் :
ரவை - முக்கால் கப்,
கோதுமை மாவு (அ) அரிசி மாவு- இரண்டு கப்,
சர்க்கரை - அரை டீ ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
ஒரு மிக்சி கப் எடுத்துக்
கொண்டு அதில் மேலேக் கொடுக்கப்பட்டுள்ள அளவுகளில்
ரவை, கோதுமை மாவு (அ) அரிசி மாவு, சர்க்கரை, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
இந்தக் கலவையை ஒரு பாத்திரத்தில் கொட்டி, அதில் புளித்துப்போன மாவை சேர்த்து கொள்ளவும். இப்போது இந்த மாவில் இட்லி, தோசை வார்த்து சாப்பிடலாம். இதில் புளித்த வாசனை வராது, சாப்பிடுவதற்கும் கூடுதல் சுவையுடன் இருக்கும்.