வீட்டிலேயே குடிநீரை சுத்தப்படுத்த வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்!
வீட்டிலேயே குடிநீரை சுத்தப்படுத்த வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்!
மனிதன் முதல் விலங்குகள் வரை அனைத்து உயிர்களும் உயிர் வாழ அவசியமான ஒன்று தண்ணீர். ஆனால் மனிதர்கள் மட்டுமே சுத்தமான குடிநீரை குடிக்கின்றனர். ஆனால், சில பகுதிகளில் அசுத்தமான நீரை குடிப்பதால் பலருக்கு பல்வேறு விதமான நோய் தொற்றுகள் ஏற்படுகிறது.
இதில், சிலர் குடிநீரை வீடுகளிலேயே தொழில்நுட்ப சாதனங்கள் மூலம் சுத்திகரித்து குடிக்கின்றனர். ஆனால் இயற்கையான பொருட்களின் மூலம் வீட்டிலேயே எவ்வாறு தண்ணீரை சுத்திகரிப்பது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் நாம் காணலாம்.
வீடுகளில் பயன்படுத்தும் தண்ணீரை வெறும் கைகளால் குறைகளில் எடுக்காமல் அதற்கென நீண்ட கைப்பிடி கொண்ட குவளைகளை பயன்படுத்தலாம்.
அதேபோல் மண்பானை மற்றும் சில்வர் பாத்திரங்களில் குழாய் வைத்த பாத்திரங்களை தண்ணீர் எடுக்க பயன்படுத்தலாம்.
நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் தேத்தான் கொட்டை கொடியை தண்ணீரில் கலந்து பயன்படுத்தினால் நீரில் உள்ள கிருமிகள் நீங்கி சுத்தமாகும்.
மண்பானையில் மிளகு, திப்பிலி, சீரகம் போன்ற மூலிகைகள் போட்டு தண்ணீர் ஊற்றி வைத்தால் தண்ணீர் சுத்தமாக இருக்கும்.
குறிப்பாக தண்ணீரை சுத்திகரிக்க அதனை கொதிக்க வைத்து தூய்மையான துணியில் வடிகட்டி பயன்படுத்தலாம்.