"உங்களுக்கு மாதவிடாயின் போது வலி இருக்கா?? அப்போ இதை பன்னுங்க!"
உங்களுக்கு மாதவிடாயின் போது வலி இருக்கா?? அப்போ இதை பன்னுங்க!
பொதுவாகவே பெண்களுக்கு மாதவிடாய்க்கு முன்பிருந்தே வலி ஆரம்பித்து விடும். மாதவிடாய் நாட்களிலும் அடிவயிறு மற்றும் இடுப்பு வலி ஏற்பட்டு எந்த வேலையும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளிவிடும். இந்த வலியை குணப்படுத்த ரோஜாப்பூவில் டீ வைத்துக் குடிக்கலாம்.
நாம் தலையில் வைக்கும் ரோஜாப்பூவில் ஏராளமான நன்மைகள் உள்ளன. உடல் எடையை குறைக்கவும், மாதவிடாய் வலியை குணப்படுத்தவும், சரும பிரச்சனைகளுக்கும் மருந்தாக ரோஜாப்பூ பயன்படுகிறது. இங்கு ரோஜாப்பூ டீ தயார் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக்கொள்ள வேண்டும். தண்ணீர் கொதித்து வரும்போது அதில் ரோஜா இதழ்களைப் போடவேண்டும். பின்னர் பட்டை, கிராம்பு, ஜாதிக்காய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
பின்னர் இதை வடிகட்டி குடிக்கலாம். இதனால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து, உடல் எடை குறையும். செரிமானக்கோளாறு மற்றும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். சதைப் பிடிப்புக்கு சிறந்த நிவாரணமாகும். மேலும் இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.