மழைக்கால நோய்களை வீட்டிலிருந்தே குணப்படுத்த வேண்டுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்!
மழைக்கால நோய்களை வீட்டிலிருந்தே குணப்படுத்த வேண்டுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்!
பொதுவாக மழைக்காலங்களில் சளி, இருமல் போன்ற பிரச்சினைகளால் தொண்டை வலி மற்றும் காய்ச்சல் ஏற்படுகிறது. இது போன்ற பாதிப்புகளை வீட்டிலிருந்தபடியே எளிதாக குணப்படுத்தலாம். இது போன்ற எளிய தொற்றுக்களை எவ்வாறு குணப்படுத்தலாம் என்பது குறித்து இந்த பதிவில் நாம் காணலாம்.
இஞ்சி டீ
டீ-யில் சிறிதளவு இஞ்சி மிளகு சேர்த்து குடித்தால் தொண்டை வலிக்கு சிறந்த நிவாரணம் கொடுக்கிறது.
துளசி சாறு
மழை மற்றும் குளிர்காலங்களில் ஏற்படும் சளி, இருமல், தொண்டை வலி, காய்ச்சல் போன்றவற்றிற்கு துளசி இலைகளை சாறு பிழிந்து கொடுத்தால் நல்ல பலன் கொடுக்கும்.
மேலும் துளசி இலை தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து சளி மற்றும் தொண்டை வலிக்கு சிறந்த நிவாரணத்தை கொடுக்கும்.
மஞ்சள் பால்
பாலை நன்றாக காய்ச்சி அதில் மஞ்சள் தூள் சேர்த்து குடித்தால் தொண்டை வலிக்கு சிறந்த பலன் கொடுக்கிறது.
எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாறில் நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் இருப்பதால் தொண்டை புண் போன்ற பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வாக பயன்படுகிறது. எனவே எலுமிச்சை சாறு சூடான தண்ணீரில் கலந்து குடித்தால் நல்ல பலன் கொடுக்கும்.