யுடியூப் சேனல் மூலம் இவ்வளவு பணம் சம்பாதிக்கலாமா! 7 வயது சிறுவன் கற்றுக்கொடுக்கும் வழிகள்
how to earn money from youtube
Youtube சேனல் மூலம் ஒரே வருடத்தில் 7 வயது சிறுவன் இந்திய ரூபாயின் மதிப்பில் 155 கோடி சம்பாதித்துள்ளான் என்றான் உங்களால் நம்ப முடியுமா? நம்பித்தான் ஆகவேண்டும்; ஏனென்றால் அதுதான் உண்மை.
7 வயதைக் கூட சரியாக தாண்டாத ரையான் ஒரு அமெரிக்கச் சிறுவன். இவனது சாதனைதான் இன்றைய சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இவன் தனது தந்தையுடன் சேர்ந்து ஆரம்பித்த யுடியூப் சேனல் இன்றைக்கு 22 மில்லியன் டாலர்களை மிகச் சர்வ சாதாரணமாக சம்பாதித்து வருகிறது. 22 மில்லியன் டாலர் என்றால் இந்திய மதிப்பில் ஏறக்குறையை 155 கோடிக்கு மேல்.
அப்படி என்ன செய்தான் அந்த பொடியன்! ஒரு 500 ரூபாய் சம்பாரிக்க பல கடினமான வேலைகளை பார்த்துவரும் மக்களுக்கு இடையே 7 வயதான ரியான் தனது பொம்மைகளை மதிப்பீடு செய்யும் வீடீயோவை பிரபலமான யூடுயூப்பில் பதிவேற்றம் செய்ததின் மூலம் இவ்வளவு தொகையை அச்சிறுவன் சம்பாதித்துள்ளான்.
ரியானின் யூ-டியூப் சேனலிற்கு 17 மில்லியன் சந்தாதாரர்கள் இருக்கின்றனர். இந்த யூ-டியூப் பக்கத்தில் குழந்தை விளையாட்டு பொம்மைகளுடன் இருக்கும் வீடியோக்களைக் காணலாம். பாக்ஸில் இருந்து பொம்மைகளை எடுத்து, அதுகுறித்து பேசுகிறான். அதனுடன் விளையாடுகிறான். இதனை வீடியோவாக எடுத்து, இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோக்களை கோடிக்கணக்கான நபர்கள் தினந்தோறும் பார்க்கின்றனர்.
பெற்றோர் உதவியுடன் கடந்த மார்ச் மாதம் 2015-ம் ஆண்டு ரியான் டாய்ஸ் ரிவியூவ் என்ற யூடியூப் சேனலை தொடங்கினான். ஆரம்பத்தில், ரியனின் காணொளி பிரபலமடையவில்லை ஆனாலும் ரியான் மற்றும் அவனது பெற்றோர்கள் விடாமுயற்சியாக தினந்தோறும் ஒரு காணொளியை பதிவேற்றம் செய்தனர். இதனையடுத்து குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்களை விமர்சனம் செய்ததன் மூலம் ரியான் பிரபலம் ஆனான்.