வீட்டுக்கு தெரியாமல் காதலிப்பவரா நீங்கள்? உங்களுக்கு அருமையான ஒரு டிப்ஸ்! உடனே படிங்க!
How to impress lover parents at first meet in tamil
பொதுவாக வயது வந்த பெண்ணும், ஆணும் காதலில் விழுவது என்பது இயல்புதான். சிலர் பள்ளி பருவதில்லையே காதலில் விழுகின்றனர். இன்னும் ஒருசிலர் கல்லூரி, அலுவலகம், வேலை செய்யும் இடம் இப்படி ஏதாவது ஒரு இடத்தில் காதலில் விழுகின்றனர். இதில் பெரும்பாலானோர் வீட்டிற்கு தெரியாமல் நீண்ட வருடங்களாக காதலித்து வருவார்கள்.
தங்கள் காதல் விஷத்தை எப்படி பெற்றோரிடம் கூறி சம்மதம் வாங்குவது என்ற பயம் ஆண், பெண் இருவருக்கும் இருக்கத்தான் செய்யும். ஒருவேளை இருவரில் ஒருவர் வீட்டில் சொல்லிவிட்டால் சில பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள், இன்னும் ஒருசில பெற்றோர் உடனே சம்மதம் தெரிவிப்பார்கள். மேலும் ஒருசிலர் சரி அந்த பையன வர சொல்லு, அந்த பொண்ண வர சொல்லு பேசி பாப்போம் என்று சொல்வார்கள்.
அந்த மாதிரி உங்கள் காதலர் அல்லது காதலியின் பெற்றோரை நீங்கள் சந்திக்க நேரிட்டால் அவர்களிடம் எப்படி நடந்துகொள்வது? அவர்களை எப்படி உங்கள் பக்கம் இழுப்பது? வாங்க பாக்கலாம்.
சரியான நேரம்:
அவர்கள் உங்களை வர சொன்ன இடத்திற்கு சரியான நேரத்திற்கு செல்லவேண்டும். உங்களுக்கு முன்பாகவே அவர்கள் வந்து காத்திருந்தாள் உங்கள் மீதான நம்பிக்கை கூறிய வாய்ப்பு உள்ளது.
உடை:
ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். நாம் உடுத்தும் உடைக்கு தனி மதிப்பு உண்டு. ஒருவரை மிகவும் கம்பீரமாகவும், அழகாகவும் காட்டும் சக்தி நாம் உடுத்தும் உடைக்கு உண்டு. எனவே சரியான உடையை தேர்வு செய்து அணிந்து செல்வது மேலும் பலம் சேர்க்கும்.
மரியாதை கொடுங்கள்:
உங்கள் காதலரையோ அல்லது காதலியையோ நீங்கள் தனியாக அல்லது நண்பர்களுடன் இருக்கும்போது வாடா, வாடி, போடா, போடி என எப்படி வேண்டுமானாலும் பேசியிருக்கலாம். ஆனால் அவர்களது பெற்றோரை சந்திக்கும் போது உங்கள் காதலர் அல்லது காதலியை மரியாதை படுத்தி பேசுங்கள்.
சாப்பிடும்போது:
அனைவரும் சாப்பிட ஆரம்பித்தபிறகு நீங்கள் சாப்பிட ஆரம்பியுங்கள். அது உங்கள் மீதான மதிப்பை அதிகப்படுத்தும். மேலும், சாப்பிடும்போது வேகமாக சாப்பிடவேண்டாம். நிதானமாக சாப்பிடுங்கள். அதேபோல வயிறு முட்ட சாப்பிடாதீர்கள். அளவோடு சாப்பிடுங்கள்.
இவை அனைத்தும் உங்கள் மீதான மதிப்பை அதிகரிப்பதோடு உங்கள் காதலன் அல்லது காதலியின் பெற்றோரை உங்கள் பக்கம் இழுக்க மிகவும் உதவி செய்யும்.