ரத்த கொழுப்பை குறைத்து, உடலை ஃபிட் ஆக்கும்.. சூப்பர் உணவு முறை.!
இரத்தத்தில் உள்ள கொழுப்புகளை குறைக்க சில எளிமையான உணவு முறைகள்.! விவரம் உள்ளே.!
கொழுப்புச்சத்து உடலில் ஹார்மோன்கள் சுரப்பை அதிகரிப்பதற்கும், செல்களை புதுப்பிப்பதற்கும் உதவியாகவுள்ளது. அதே நேரம் கெட்ட கொழுப்புகள் உடலில் சேர்ந்தால் அது நமக்கு பல்வேறு விதமான உபாதைகளை ஏற்படுத்தும்.
உடலில் கொழுப்புகள் சேராமல் இருப்பதற்கான உணவுகள் பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
பூண்டு : இது ட்ரெய்க்ளிசெரைட்களையும், உடலில் உள்ள கெட்ட கொழுப்பையும் குறைக்க உதவியாகவுள்ளது. வீக்கத்தை குறைக்கவும் இது உதவி புரிகிறது.
இஞ்சி : இது கொழுப்புகளை குறைக்க குறைந்தளவிலான உதவியை வழங்கும் என கூறப்படுகிறது.
பட்டை : இது ட்ரெய்க்ளிசெரைட்களையும் , கெட்ட கொழுப்பையும் படிப்படியாக குறைக்க உதவி புரிகிறது.
கிரீன் டீ : இது கெட்ட கொழுப்பை குறைப்பதோடு, நல்ல கொழுப்பையும் உடலில் அதிகரிக்க செய்கிறது.
வெந்தயம் : வெந்தயத்தில் இருக்கின்ற நார்சத்து இரத்தத்தால் உறிஞ்சப்படும் அதிகளவிலான கொழுப்பை குறைப்பதோடு, கெட்ட கொழுப்பையும் வெகுவாக குறைக்கிறது.
கொத்தமல்லி விதைகள்: கொத்தமல்லி விதையிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்களும், நார்சத்துக்களும் உடலிலுள்ள கெட்ட கொழுப்புகளை வெகுவாக குறைக்க உதவுகிறது.
ஹாதார்ன் : இந்தப் பழம் கொழுப்பினளவை சமன்படுத்தவும், இதயத்தின் ஆரோக்கியத்திற்காகவும் தயார் செய்யப்படும் மருந்துகளில் உபயோகப்படுத்தப்படும் ஒரு பொருளாக இருக்கிறது.