×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சுவை மிக்க சத்தான பீட்ரூட் தோசை சாப்பிட்டிருக்கீங்களா.? இப்பவே செஞ்சு பாருங்க.!

சுவை மிக்க சத்தான பீட்ரூட் தோசை சாப்பிட்டிருக்கீங்களா.?

Advertisement

நம் உடலில் அடிக்கடி பிரச்சினை ஏற்படாமல் எப்போதும் உடல் நலம் சீராக இருக்க வேண்டும் என்றால் நிச்சயமாக நாம் அனைவரும் உணவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. உணவே மருந்து என்ற பழமொழிக்கு ஏற்றவாறு சில சத்தான உணவுகளை நாம் சாப்பிட்டு வந்தால், மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய தேவையே இருக்காது. ஆனாலும் அவ்வப்போது மாறி வருகின்ற உணவு முறைகள் காரணமாக, பலரும் வயிறு நிறைந்தால் போதும் என்ற மனநிலையிலேயே இருக்கின்றார்கள்.

ஆகவே இன்றைய காலகட்டத்தில் பலரும் இளம் வயதிலேயே பல்வேறு உடல் நலக் கோளாறுக்கு ஆளாக நேருகிறது. இதிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், உடல் நலத்தை பாதுகாப்பாக வைத்திருக்கவும் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யவும் பீட்ரூட் தோசை உங்களுக்கு நல்ல பலனை வழங்கும். பொதுவாக நாள்தோறும் எதாவது ஒரு வேளையாவது தோசை சாப்பிடும் பழக்கம் நம்மில் பல பேருக்குள்ளது.

வெறும் தோசை சாப்பிடுவதற்கு பதிலாக இந்த பீட்ரூட் தோசை சாப்பிட்டால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் உண்டாகும் என்று சொல்லப்படுகிறது. தற்போது இந்த பீட்ரூட் தோசையை செய்வது எப்படி என்பது பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :

உப்பு - தேவையான அளவு

அசோபொடிடா - 1/2 சிட்டிகை

மிளகாய் -2

சீரகம் - 1/2 டீஸ்பூன்

பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்

பீட்ரூட் -1

உளுத்தம் பருப்பு - 1 கப்

அரிசி - 3 கப்


செய்முறை :

உளுத்தம் பருப்பையும், அரிசியையும் நன்றாக சுத்தம் செய்து, இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலை இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஒரு பீட்ரூட்டை துண்டு துண்டாக வெட்டி, அதில் மிளகாய், சீரகம் போன்றவற்றை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் இந்த கலவையில் உளுத்தம் பருப்பு, அரிசி ஆகியவற்றை சேர்த்து அரைத்த மாவை சேர்த்துக்கொண்டு,  நன்றாக கலக்கி விடவும். ஒரு சில நிமிடங்கள் சென்ற பின்னர் அடுப்பில் தோசை  தவாவை வைத்து சாதாரணமாக, நாம் தோசை ஊற்றுவதை போல ஊற்றி எடுத்தால் பீட்ரூட் தோசை தயாராகிவிடும்.

இந்த பீட்ரூட் தோசையை சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். இந்த தோசையில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. பீட்ரூட்டில் உள்ள சத்துக்கள் உடலில் ரத்தம் ஊறுவதற்கு உதவியாக இருக்கும். அதே போல ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கும் உதவி புரியும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Beetrut Dosai #health tips #Tamil Health Tips #Today health tips #Health tips today
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story