இந்தப் பொருள் மட்டும் இருந்தால் போதும்.? 20 நிமிடத்தில் சுவையான அதிரசம் ரெடி.!
இந்தப் பொருள் மட்டும் இருந்தால் போதும்.? 20 நிமிடத்தில் சுவையான அதிரசம் ரெடி.!
வெறும் 20 நிமிடத்தில் ருசியான அதிரசம் செய்வது எப்படி என்பது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். இதற்கு கோதுமை மாவு மட்டும் போதுமானது.
தேவையான பொருட்கள் :
எண்ணெய்
நெய் - 1 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1\4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 1 1\2 கப்
வெல்லம் - 1 1\2 கப்
பச்சரிசி மாவு - 1\2 கப்
கோதுமை மாவு - 1 கப்
செய்முறை :
பச்சரிசி மாவு, கோதுமை மாவு உள்ளிட்ட இரண்டையும் நன்றாக சேர்த்து கலக்கி, ஒரு பாத்திரத்தில் தண்ணீரை வைத்து, அதில் வெல்லத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். வெல்லம் நன்றாக கரைந்தவுடன், தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும். அதன்பிறகு மறுபடியும் இதனை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
பின்பு அதில் ஏலக்காய் பொடியையும், உப்பையும் சேர்த்து கிளற வேண்டும். பின்பு நன்றாக ஒட்டும் பதம் வந்தவுடன், அதில் நாம் தயாராக வைத்திருக்கும் மாவை சேர்த்து கிளறி விட வேண்டும். அதில் சற்றே நெய்யை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதனை உருண்டையாக பிடித்து, வாழை இலையில் நெய் தடவி, அதில் அதிரசத்தை தட்டலாம். பின்னர் இதை நன்றாக கொதிக்கும் எண்ணெயில் போட்டுக் கொள்ளவும். அதிரசம் நன்றாக வெந்து மேலே வரும் வரையில் காத்திருந்து, பின்பு அதனை திருப்பி போட்டு, இரு பக்கமும் பொன்னிறமாக மாறும் வரையில் காத்திருக்கவும். இப்போது சுவையான அதிரசம் தயாராகிவிடும்.