சுவையான கத்தரிக்காய் சட்னி.! எப்படி செய்யணும் தெரியுமா.?
சுவையான கத்தரிக்காய் சட்னி.! எப்படி செய்யணும் தெரியுமா.?
இந்த கத்திரிக்காயில் செய்யும் சட்னி சுவையாக இருக்கும். அதோடு அனைவரும் விரும்பி உண்பார்கள். இதை ஒரு முறை செய்து பாருங்கள். தற்போது அதை எப்படி செய்யலாம் என்பதை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
கருவேப்பிலை - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உளுத்தம் பருப்பு - தேவையான அளவு
கடுகு - தேவையான அளவு
மிளகுத்தூள்
மஞ்சள் தூள்
உப்பு
பச்சை மிளகாய் - 2
சின்ன வெங்காயம் - கைப்பிடி அளவு
தக்காளி - இரண்டு
கத்தரிக்காய் - 4
செய்முறை :
பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய் போன்றவற்றை கழுவி சிறு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதன் பிறகு சிறிதளவு தண்ணீரில் மஞ்சள் தூள், உப்பு ஆகிய இரண்டையும் சேர்த்து, வேக வைக்க வேண்டும். வெந்தவுடன் அதனை இறக்கி மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அதன் பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து, அது சூடானவுடன் கருவேப்பிலை, உளுத்தம் பருப்பு, கடுகு ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அதன் பிறகு அதில் அரைத்த கத்தரிக்காய் விழுதை போடவும். இறுதியாக சிறிதளவு மிளகுத்தூள் தூவி, கொதிக்க வைத்தவுடன், இறங்கி வைக்கவும். இப்போது சுவையான கத்திரிக்காய் சட்னி தயாராகிவிடும். இந்த சட்னி இட்லி, தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும்.