அட்டகாசமான சுவை மிக்க கேரளா தக்காளி குழம்பு.! இப்படி செய்து பாருங்கள்.!
அட்டகாசமான சுவை மிக்க கேரளா தக்காளி குழம்பு.! இப்படி செய்து பாருங்கள்.!
அனைத்து சமையலறைகளிலும் தக்காளி இல்லாமல் சமையல் வேலையே நடக்காது. அந்தளவிற்கு தக்காளி சமையலறையில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. தென் அமெரிக்காவை பிறப்பிடமாக கொண்ட தக்காளி போர்த்துக்கீசியர்கள் மூலமாக 16ம் நூற்றாண்டில் தான் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த தக்காளி இந்தியர்களின் உணவில் இரண்டற கலந்து விட்டது. இதன் காரணமாக தான் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு கிலோ தக்காளி ரூ. 200 ரூபாய் ரூபாய் அதிகரித்து இருந்தது.
நாள்தோறும் குழம்பு, ரசம், சாம்பார் உள்ளிட்ட அனைத்திலும் தக்காளியை பயன்படுத்தி வருகிறார்கள். சிலர் அவசர தேவைக்காக, தக்காளி தொக்கு, தக்காளி குழம்பு, தக்காளி சட்னி என சமைத்து சாப்பிடுகிறார்கள். ஆனால் வீட்டில் தக்காளி மட்டுமே இருக்கும் அதை வைத்து சமைக்க வேண்டும் என்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், அனைவருக்கும் போரடித்து விடும். ஆகவே இது அப்படிப்பட்டவர்களுக்கான ஒரு சமையல் குறிப்பு தான்.
கடுகு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
துருவிய தேங்காய் - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி -4
செய்முறை :
அடுப்பில் கடாயை வைத்து, தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொண்டு, எண்ணெய் காய்ந்தவுடன் அதில் கருவேப்பிலை, கடுகு ஆகிய இரண்டையும் சேர்த்து, நன்றாக பொரிய விட வேண்டும். அடுத்தபடியாக தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி வெந்தவுடன் அதில் சற்று தண்ணீரை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
அதன் பின் ஒரு மிக்ஸியில் வெங்காயம், தேங்காய் ஆகியவற்றை போட்டு, தண்ணீர் ஊற்றி பேஸ்ட்டாக அரைத்து கொள்ளலாம். இப்போது இந்த கலவையை நன்றாக கொதித்துக் கொண்டிருக்கும் தக்காளி குழம்பில் ஊற்றி கிளறி விட வேண்டும்.
அடுத்தபடியாக சிறிதளவு தண்ணீரை சேர்த்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து, நன்றாக கிளறிவிட்டு, 10 நிமிடம் வரையில் கொதிக்க வைக்க வேண்டும். கடைசியாக குழம்பிலுள்ள பச்சை வாடை நீங்கியவுடன் அடுப்பை நிறுத்தினால், அட்டகாசமான சுவை மிக்க மணமணக்கும் கேரளா தக்காளி குழம்பு தயாராகிவிடும்.