எப்படி டீ போட்டாலும் சுவை வரலையா.?! இதோ கைகொடுக்கும் சூப்பர் வழி.!
எப்படி டீ போட்டாலும் சுவை வரலையா.?! இதோ கைகொடுக்கும் சூப்பர் வழி.!
நிறைய பேருக்கு டீ காபி என்பது அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. இது அடிமைத்தனமாக மாறி குறிப்பிட்ட நேரத்திற்கு டீ குடிக்கவில்லை என்றால் அவர்களது கை கால் நடுக்கம் ஏற்படுவதை கூட நாம் பார்த்திருப்போம்.
டீயை எப்படி போட்டாலும் அது சுவையாக இல்லை என்று குறைபட்டுக் கொள்வார்கள். அவர்கள் கீழ்காணும் முறையை பயன்படுத்தி டீ போட்டால் அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
கெட்டியான சுத்தமான பால் - 1/4 லிட்டர்
ஏலக்காய் - 5
சீனி - 2 ஸ்பூன்
தேயிலை - 2 ஸ்பூன்
இஞ்சி - ஒரு துண்டு
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் பாலை நன்றாக கொதிக்க கொண்டே, மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை, தேயிலை, இஞ்சி மற்றும் ஏலக்காய் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்து போட்டு 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
அதன்பின் ஏற்கனவே கொதிக்க வைத்துள்ள பாலை அந்த கலவையில் ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வடிகட்டி பரிமாறலாம்.
குறிப்பு : நீண்ட நேரம் டிகாஷன் சேர்த்த பின் கொதிக்க வைப்பது டீ-யின் சுவையை மழுங்கடித்து விடும்.