×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கால்சியம் நிறைந்த முட்டைகோஸ் சட்னி.. வீட்டிலேயே அருமையாக செய்வது எப்படி?..!!

கால்சியம் நிறைந்த முட்டைகோஸ் சட்னி.. வீட்டிலேயே அருமையாக செய்வது எப்படி?..!!

Advertisement

முட்டைகோஸ் மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை ஈடுசெய்ய உதவுகிறது. மேலும் மலச்சிக்கல் பிரச்சனையையும் சரிசெய்கிறது. முட்டைக்கோஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

தேவையான பொருட்கள் :

முட்டைக்கோஸ் - 200 கிராம் 

இஞ்சி - 1/2 இன்ச் 

வெங்காயம் - 1

தக்காளி - 1

கருவேப்பிலை - சிறிதளவு 

பச்சை மிளகாய் - 2

புளி - சிறு துண்டு 

துருவிய தேங்காய் - 4 தேக்கரண்டி 

கடுகு - 2 தேக்கரண்டி 

உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி

பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை

வரமிளகாய் - 1

தாளிக்க :

கருவேப்பிலை - சிறிதளவு 

எண்ணெய் - 1 தேக்கரண்டி 

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி 

கடுகு - 1/2 தேக்கரண்டி

செய்முறை :

★முதலில் வெங்காயம், தக்காளி, முட்டைகோஸை பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

★ஒரு வானலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வரமிளகாய், உளுத்தம் பருப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து பொன்னிறமாக தாளித்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.

★பின் அதே வானலில் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கும் வரை வதக்கி கொள்ள வேண்டும்.

★அதனுடன் முட்டைக்கோஸ் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கி, தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

★பின் அதனை மிக்ஸியில் சேர்த்து லேசாக அரைத்து புளிச்சாறு, தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும்.

★இறுதியாக கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றினால் முட்டைக்கோஸ் சட்னி தயார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cabbage chutney #Lifestyle #Kitchen Corner #Ladies Corner #முட்டைக்கோஸ் சட்னி
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story