சுவையான சாக்லேட் பனானா கேக்.. வீட்டிலேயே செய்வது எப்படி?.!
சுவையான சாக்லேட் பனானா கேக்.. வீட்டிலேயே செய்வது எப்படி?.!
வீட்டிலேயே நமக்கு விருப்பமான பல்வேறு வகை கேக்குகளை செய்து சாப்பிடலாம். அந்த வகையில், இன்று சாக்லேட் பனானா கேக் செய்வது எப்படி என காணலாம்.
பனானா கேக் செய்ய தேவையானவை :
மைதாமாவு - 250 கிராம்,
சர்க்கரை - 5 கரண்டி,
கோகோ பவுடர் - 2 கரண்டி,
எண்ணெய் - 50 மில்லி
பேக்கிங் பவுடர் - 1 கரண்டி,
பேக்கிங் சோடா - 1/2 கரண்டி,
வாழைப்பழம் பழுத்தது - 2,
காய்ச்சிய பால் - 2 கரண்டி,
சாக்லேட் துண்டு - தேவைக்கேற்ப,
வினிகர் - 1 கரண்டி.
செய்முறை :
முதலில் எடுத்துக்கொண்ட வாழைப்பழ துண்டு, சர்க்கரை மற்றும் எண்ணெயை மிக்சியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர், மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடாவை ஒன்றாக சேர்த்து சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதனை வாழைப்பழ கலவையில் கொட்டி கிளறி, சிறிது சிறிதாக பாலை ஊற்றி பசைபோல தளர்வாக பிசைந்து எடுக்க வேண்டும். இதனுடன் வினிகர் மற்றும் சாக்லேட் துண்டை சேர்த்து கலக்கிய பின்னர், பாத்திரத்தின் உட்பகுதியில் எண்ணெய் தடவி கலவையை ஊற்ற வேண்டும்.
பின்னர், அடுப்பில் கனமான பாத்திரத்தை வைத்து சிறிது நீரை ஊற்றி குக்கிங் ஸ்டாண்டை பொருத்தி, கேக் கலவை உள்ள பாத்திரத்தை அதன் மீது வைத்து காற்று புகாத வகையில் மூட வேண்டும். மிதமான சூட்டில் 30 நிமிடம் வேகவைத்த பின்னர் ஆறவைத்து எடுத்தால், சுவையான சாக்லேட் பனானா கேக் ரெடி..