நாவில் எச்சில் ஊறும் சுவையான கோவைக்காய் ஊறுகாய் செய்வது எப்படி?...!
நாவில் எச்சில் ஊறும் சுவையான கோவைக்காய் ஊறுகாய் செய்வது எப்படி?...!
வாரத்தில் நாம் இரண்டு முறை கோவைக்காயை உணவில் சேர்த்துக்கொண்டு சாப்பிட்டு வந்தால், செரிமான பிரச்சனை நீங்கும். மலச்சிக்கல் சரியாகும், கோவைக்காயில் இருக்கும் இரும்புச்சத்து நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளை செய்கிறது. இன்று கோவைக்காயில் ஊறுகாய் செய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
கோவைக்காய் - ஒரு கிலோ,
கடுகு, சீரகம், வெந்தயம் - தலா 2 கரண்டி,
காய்ந்த மிளகாய் - 100 கிராம்,
பெருங்காயத்தூள் - ஒரு கரண்டி,
இஞ்சி - சிறிதளவு,
பூண்டு - 20 பற்கள்,
நல்லெண்ணெய் மற்றும் உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கோவைக்காயை முதலில் நீள வாக்கில் நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். புளியை பாத்திரத்தில் இட்டு, சிறிது நீர் ஊற்றி கரைக்க வேண்டும். அடுப்பில் வானெலியை வைத்து எண்ணெய் ஊற்றாமல் வெந்தயம், சீரகம், கடுகு ஆகியவற்றை தனித்தனியே மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, உப்பு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி முதலில் நறுக்கிய கோவைக்காய்களை இட்டு நன்கு வதக்கிய பின் இறக்க வேண்டும்.
வானொலியில் கடுகு, அரைத்த மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கிய கோவைக்காய் வதங்கியதும் இறுதியாக புளிக்கரைசலை ஊற்றி 15 நிமிடங்கள் மிதமான தீயில் நன்கு கொதிக்க விட வேண்டும். இந்த கலவை ஊறுகாய் பாதத்திற்கு வந்ததும் அடுப்பை அனைத்து விடலாம்.