நம்ம வீட்டு சுட்டீஸ்க்கு பிடித்த மசாலா சப்பாத்தி.. வீட்டிலேயே செய்து அசத்துவது எப்படி?.!
நம்ம வீட்டு சுட்டீஸ்க்கு பிடித்த மசாலா சப்பாத்தி.. வீட்டிலேயே செய்து அசத்துவது எப்படி?.!
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மசாலா சப்பாத்தி செய்வது எப்படி என இன்று காணலாம்.
வீட்டிலிருக்கும் சப்பாத்தி, சேமியா, உப்புமா என்று செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு உணவு மீது வெறுப்பு ஏற்படும். நாம் அன்றாடம் செய்யும் உணவுகளையே சற்று வித்தியாசமான முறையில் செய்து கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் மசாலா சப்பாத்தி செய்வது எப்படி என இன்று காணலாம்.
தேவையான பொருட்கள் :
எண்ணெய் - தேவைக்கேற்ப
கருவேப்பிலை - தேவைக்கேற்ப
கொத்தமல்லி - தேவைக்கேற்ப
ஓமம் - 1/2 தேக்கரண்டி
மல்லிபொடி - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1
மிளகாய் - 100 கிராம்
கோதுமை மாவு - ஒரு கப்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
★முதலில் பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், கொத்தமல்லி ஆகியவற்றை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
★அதனுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து மாவை பிசைய வேண்டும். அதன் பின்னர் கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய், கருவேப்பிலை, மிளகாய்பொடி, மல்லிபொடி, ஓமம், வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து 30 நிமிடம் வரை கைப்படாமல் வைக்கவும்.
★மாவு நடுத்தரமாக இருப்பது போன்ற பார்த்துக்கொண்டு, சப்பாத்திக்கு தேவையான அளவில் மாவுகளை உருண்டையாக உருட்டி தோசைக்கல்லில் போட்டு எடுத்தால் சுவையான மசாலா சப்பாத்தி தயாராகிவிடும்.