எளிமையான முறையில் சுலபலமான புதினா சாதம்: செய்வது எப்படி?.!
எளிமையான முறையில் சுலபலமான புதினா சாதம்: செய்வது எப்படி?.!
உடலுக்கு சத்துக்களை வாரிவழங்கும் உணவுகளை அவ்வப்போது நாம் எடுத்துக்கொள்வது, உடல்நலத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று ஆகும். அந்த வகையில், இன்று எளிமையான முறையில் புதினா சாதம் செய்வது எப்படி என தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
வடித்த சோறு - 2 கப்,
எண்ணெய் - தேவையான அளவு,
மிளகு - 2 கரண்டி,
கிராம்பு - 3,
இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு,
நறுக்கிய வெங்காயம் - 2,
புதினா நறுக்கியது - 1 கப்,
பச்சை மிளகாய் - 3,
உப்பு - தேவையான அளவு
இதையும் படிங்க: பாகற்காயை கசப்பில்லாமல் சாப்பிட சூப்பர் ஐடியா.?! இப்பவே ட்ரை பண்ணுங்க.!
செய்முறை
முதலில் எடுத்துக்கொண்ட கடாயில் எண்ணெய் ஊற்றி இஞ்சி-பூண்டு விழுதை சேர்க்கவும். பின் மிளகு, கிராம்பு, பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்க வேண்டும்.
இவை வதங்கியதும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் புதினா இலைகளை சேர்த்து சிறிது வதக்க வேண்டும். புதினா வதங்கியதும் சாதம், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி பரிமாறினால், எளிமையான முறையில் சுவையான புதினா சாதம் தயார்.
இதையும் படிங்க: புதினா சாதம் & சேனைக்கிழங்கு பொரியல்; சுவையாக செய்து அசத்துவது எப்படி?.. டிப்ஸ் உள்ளே.!