10 நிமிடத்தில் சுவையான சிவப்பு அவல் புட்டு.. வீட்டிலேயே செய்து அசத்துவது எப்படி?.!!
10 நிமிடத்தில் சுவையான சிவப்பு அவல் புட்டு.. வீட்டிலேயே செய்து அசத்துவது எப்படி?.!!
சிவப்பு அவல் நமது உடலுக்கு தேவையான பல சத்துக்களை அளிக்கும். இதில் இன்று சுவையான புட்டு செய்வது குறித்து காணலாம்.
தேவையான பொருட்கள் :
சிவப்பு அவல் - 2 கிண்ணம்
உப்பு - 2 சிட்டிகை
தண்ணீர் - 4 கிண்ணம்
நாட்டு சர்க்கரை - 1/2 கிண்ணம்
தேங்காய் துருவல் - 1 கிண்ணம்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
செய்முறை :
★முதலில் எடுத்துக்கொண்ட சிவப்பு அவலை மிக்ஸியில் போட்டு சற்று கொரகொரப்புடன் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
★ தண்ணீரை நன்கு கொதிக்கவைக்க வேண்டும்.
★பொடித்த அவலை ஒரு பாத்திரத்தில் போட்டு கொதிக்கவைத்த நீரை சிறிது சிறிதாக ஊற்றி கலந்து பத்து நிமிடங்கள் வரை ஊறவைக்க வேண்டும்.
★இப்போது அவல் ஊறிய பின்னர் அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு இட்லி தட்டில் ஊறவைத்த அவலை 7 முதல் 10 நிமிடம் சேர்த்து வேகவைக்க வேண்டும்.
★வேகவைத்த அவலை பாத்திரத்தில் போட்டு சூடாக இருக்கும்போதே தேங்காய் துருவல், ஏலக்காய் தூள், நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து பரிமாறினால் சுவையான சிவப்பு அவல் புட்டு தயார்.