உடலுக்கு சத்துக்களை வழங்கும் தினை அல்வா.. வீட்டிலேயே செய்து அசத்துவது எப்படி?..!
உடலுக்கு சத்துக்களை வழங்கும் தினை அல்வா.. வீட்டிலேயே செய்து அசத்துவது எப்படி?..!
உடலுக்கு சத்துக்களை வாரி வழங்கும் சிறுதானிய தினை அரிசியில் அல்வா செய்வது எப்படி என இன்று காணலாம்.
தேவையான பொருட்கள்:
தினை அரிசி - 200 கிராம்,
வெல்லம் - 200 கிராம்,
ஏலக்காய் தூள் - அரை கரண்டி,
சுருக்குத்தூள் - 2 சிட்டிகை,
முந்திரி, பாதாம், திராட்சை - 10 கிராம்,
நெய் - 100 கிராம்.
செய்முறை:
முதலில் எடுத்துக்கொண்ட தினை அரிசி மாவோடு வெல்லம், தண்ணீர் சேர்ந்து தோசை மாவு பதத்திற்கு கரைக்க வேண்டும். பின்னர் பாத்திரத்தில் நெய் விட்டு கரைத்த மாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
இது கட்டியாகாமல் பார்த்து பத்துடன் கிளறி வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம், ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கினால் தினை அல்வா தயார்.