அட.. பருப்பு துவையல் செய்வது இவ்வளவு ஈஸியா.! இன்றே செய்து அசத்துங்கள்.!
அட.. பருப்பு துவையல் செய்வது இவ்வளவு ஈஸியா.! இன்றே செய்து அசத்துங்கள்.!
துவரம் பருப்பில் புரதம் மற்றும் நார்ச்சத்து குறைவாக இருப்பதால் பசியை குறைப்பதன் மூலம், உடல் எடை இழப்பிற்கு உதவுகிறது. மேலும், வளர்சிதை மாற்றங்களை அதிகரித்து ஒட்டுமொத்த கலோரிகள் உட்கொள்ளுவதை கட்டுப்படுத்துவதோடு, ரத்த அழுத்த பிரச்சனைகளையும் தீர்க்க உதவுகிறது. துவரம் பருப்பில் உள்ள வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது.
தேவையான பொருட்கள் :
எண்ணெய் - 1/2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
பெருங்காயம் - 1 துண்டு
உப்பு - தேவைக்கேற்ப
துவரம் பருப்பு - 50 கிராம்
தேங்காய்த் துண்டு - 3 பத்தை
கடலைப் பருப்பு -50 கிராம்
செய்முறை :
★முதலில் கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து துவரம்பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் பெருங்காயம், தேங்காய் துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
★பின் அதனுடன் காய்ந்த மிளகாயை போட்டு வறுக்க வேண்டும்
★அடுத்து இவையனைத்தும் நன்றாக வறுத்த பின், வறுத்த பொருட்களை ஆற வைத்து சிறிதளவு தண்ணீர் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக அரைத்தாலே பருப்புத் துவையல் தயாராகிவிடும்.
★முக்கியமாக கார குழம்பு வகைகளுக்கு பருப்பு துவையல் மிகவும் சுவையாகவும், ஏற்றதாகவும் இருக்கும்