பழைய சாதம், தோசைக்கு அருமையான சுவையான பூண்டு-தக்காளி தொக்கு செய்வது எப்படி?..!
பழைய சாதம், தோசைக்கு அருமையான சுவையான பூண்டு-தக்காளி தொக்கு செய்வது எப்படி?..!
2 முதல் 3 நாட்கள் வரை வீணாகாமல், மெருகேறிய சுவையுடன் இட்லி, தோசை, பழைய சாதத்திற்கு சுவையான தக்காளி-பூண்டு தொக்கு செய்வது எப்படி என இன்று காணலாம்.
தேவையான பொருட்கள்:
நாட்டு தக்காளி - 1/4 கிலோ
பூண்டு - 20 பற்கள்,
இஞ்சி - 30 கிராம்,
மிளகாய்தூள் - 5 கரண்டி அல்லது காரத்திற்கேற்ப,
கடுகு - 1 கரண்டி,
வெந்தயம் - 1/2 கரண்டி,
நல்லெண்ணெய் - 150 மிலி,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
முதலில் எடுத்துக்கொண்ட தக்காளியை நன்கு பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இஞ்சியை தோல்நீக்கி துருவி வைத்துக்கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் சூடானதும் கடுகு, வெந்தயம் சேர்த்து தாளித்து பூண்டு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
இஞ்சி-பூண்டு வதங்கியதும் தக்காளி, மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து அடிக்கடி கிளற வேண்டும். இப்போது மிதமான தீயை உபயோகம் செய்ய வேண்டும். தக்காளி தொக்கு போல எண்ணெய் பிரிந்து வரும் தருவாயில் இறக்கினால் சுவையான தக்காளி-பூண்டு தொக்கு தயார். இதனை சூடான இட்லி, தோசை, தண்ணீர் ஊற்றிய பழைய சாதம் ஆகிய உணவுகளுக்கு வைத்து சாப்பிடலாம்.