வாட்டி வதைக்கும் வெயிலிலிருந்து தப்பிக்க வாழைத்தண்டு சூப்.. வீட்டிலேயே செய்து அசத்துவது எப்படி?..!!
வாட்டி வதைக்கும் வெயிலிலிருந்து தப்பிக்க வாழைத்தண்டு சூப்.. வீட்டிலேயே செய்து அசத்துவது எப்படி?..!!
வாழைமரத்தின் ஒவ்வொரு பாகமும் நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடியவை. வாழைத்தண்டு உடலுக்கு குளிர்ச்சியை தரும். உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றும். இன்று வாழைத்தண்டில் சூப் செய்வது குறித்து காணலாம்.
தேவையான பொருட்கள்:
வாழைத்தண்டு - 1 கிண்ணம்,
மஞ்சள் தூள் - சிறிதளவு,
சீரகப்பொடி - கால் கரண்டி,
மிளகுத்தூள், எலுமிச்சை சாறு - சுவைக்கேற்ப,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - 1 கரண்டி,
கடுகு - 1/2 கரண்டி,
கறிவேப்பில்லை, கொத்தமல்லி - சிறிதளவு.
செய்முறை:
முதலில் எடுத்துக்கொண்ட வாழைத்தண்டை நார் நீக்கி பொடியாக நறுக்க வேண்டும். பின் வாழைத்தண்டை மோரில் சேர்த்து ஊற வைக்க வேண்டும்.
குக்கரில் நறுக்கிய வாழைத்தண்டு, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து 2 கிண்ணம் நீர் ஊற்றி அடுப்பில் வைத்து 3 விசில் வந்ததும் இறக்கி வைக்க வேண்டும்.
வாழைத்தண்டு மென்மையாக வெந்ததும் நீரை வடிகட்டி தனியே வைத்துக்கொள்ளவும். வாழைத்தண்டை மிக்ஸர் ஜாரில் சேர்த்து அரைத்து, அந்நீரை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அந்த கலவையை அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து, வானெலியில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து தாளித்து சூப்புடன் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னர் சீரகப்பொடி, உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து சூப்புடன் கொதிக்க வைக்க வேண்டும். சூப் தயாரானதும் கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கினால் சுவையான வாழைத்தண்டு சூப் தயார்.