சூடான சோறுக்கு ஏற்ற., சுவையான வெண்டைக்காய் துவையல் செய்வது எப்படி?
சூடான சோறுக்கு ஏற்ற., சுவையான வெண்டைக்காய் துவையல் செய்வது எப்படி?
உடலுக்கு பல நன்மைகளை வாரி வழங்கும் வெண்டைக்காயில், நாம் சுவையான காரக்குழம்பு, சாம்பார், பொரியல், சிப்ஸ் என பல விஷயங்களை செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று சூடான சாதத்திற்கு ஏற்ற வெண்டைக்காய் துவையல் செய்வது எப்படி என தெரிந்துகொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் - 1/2 கிலோ,
கடலை பருப்பு - 2 கரண்டி,
உளுந்தம் பரப்பு - 2 கரண்டி,
வரமிளகாய் - 4 முதல் 6 (காரத்திற்கேற்ப),
பெரிய வெங்காயம் - 3,
பூண்டு - 6,
புளி - சிறிதளவு,
கடுகு - 2 கரண்டி,
பூண்டு - 10,
கறிவேப்பில்லை - சிறிதளவு,
உப்பு & எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை
முதலில் எடுத்துக்கொண்ட வெண்டைக்காயை நன்கு வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். முக்கால் பதம் வேகவைத்து எடுக்க வேண்டும்.
பின் கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு, புளி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இவை சூடு ஆறியதும் மிக்சியில் சேர்த்து வெண்டைக்காயுடன் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். உப்பும் சேர்த்துக்கொள்ளவும்.
இதையும் படிங்க: சுவையான வெண்டைக்காய் மோர்க்குழம்பு செய்வது எப்படி? அசத்தல் டிப்ஸ் உள்ளே.!
இறுதியாக கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பில்லை சேர்த்து தாளித்து சூடான சோறுடன் பிசைந்து சாப்பிடலாம். அப்பளம், சோற்று வடகம் போன்றவை இதற்கு அருமையாக இருக்கும்.
இதையும் படிங்க: குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிக்க.. புத்திசாலியாக மாற இதை செய்யுங்கள்.!