தொங்குற தொப்பையை ஒரே வாரத்தில் குறைக்க ஈஸியான டிப்ஸ்!
How to reduce belly fat using home remedies
இன்றைய நாகரிக உலகில் பெரும்பாலும் ஆண்களிடம் இருப்பது இரண்டு விஷயங்கள். ஓன்று ஸ்மார்ட் போன் மற்றொன்று முட்டியை தொடும் அளவிற்கு தொப்பை. பெரும்பாலும் இன்றைய இளைஞர்கள் நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் கண்ட உணவுகளை அருந்துவது, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது மற்றும் போதிய அளவு உடற்பயிற்சி செய்யாதது இதனால் உடல் குண்டாகி தொப்பை உண்டாகிறது.
உடலில் சேரும் கெட்ட கொழுப்புகள் ஓன்று சேர்ந்து உடலில் அப்படியே தங்கி விடுகின்றன. இதனால் சிறுவயதிலேயே பலவிதமான நோய்கள் நம்மை தாக்குகின்றன. சரி இந்த கெட்ட கொழுப்பை கரைத்து தொப்பையை எப்படி சரிசெய்வது என்று பார்க்கலாம் வாங்க.
நமக்கு நன்மை தரும் பழங்களில் ஓன்று பப்பாளி. நன்கு பழுத்த பப்பாளி பலத்தை சிறு துண்டுகளாக வெட்டி உணவுடன் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் தொப்பை குறைவதை கண்கூட பார்க்க முடியும்.
மேலும் வாழ தண்டை சூப் செய்து அதனை அருந்தி வர தொப்பை விரைவாக குறையும். மேலும் வீட்டிலேயே சிறு சிறு உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் தொப்பையை எளிதில் குறைக்க முடியும்.