எந்த விரலில் விபூதி வைத்தால் நல்லது தெரியுமா? எந்த விரலில் விபூதி வைக்க கூடாது?
How to take vipoodhi in proper way in tamil
இந்து மதத்தை பொறுத்தவரை சாமி கும்பிட பிறகு திருநீறு(விபூதி) இட்டுக்கொள்வது வழக்கமான ஓன்று. திருநீறு பூசிக்கொளவதால் ஐஸ்வர்யம் கிட்டும் என்பது நம்பிக்கை. திருநீறு பற்றி பல்வேறு காப்பியங்கள் அதன் பெருமையை கூறுகின்றது. அத்தகைய திருநீறை நாம் பூசிக்கொள்ளும்போது அதை எந்த விரலால் எடுக்க வேண்டும், என்ன விரலால் பூச வேண்டும் என்பதை பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
கட்டை விரலினால் விபூதியை தொட்டு அணிந்தால் தீராத வியாதிகள் ஏற்படும். கட்டை விரலால் விபூதியை தொட்டு பூசி கொண்டாள் வீட்டில் பொருள்சேதம் ஏற்படுமாம். நடு விரலால் விபூதியை தொட்டு பூசினால் வீட்டில் நிம்மதி இழந்து பல்வேறு சண்டைகள் வருமாம். சுண்டு விரலால் திருநீறு அணிந்தால் கிரகதோஷம் உண்டாகும்.
மோதிர விரலால் மட்டுமே விபூதியை தொட்டு நெற்றியில் பூச வேண்டும். அவ்வாறு செய்வதால் நினைத்த காரியம் கைகூடும், இந்த உலகமே நம் வசப்படும் என்கிறது சாஸ்திரம். மேலும் நாம் எடுக்கும் முயற்சிகள் வெற்றிபெறும்.