ரத்த அழுத்தத்தை குறைக்கும் உணவுகள் என்னென்ன தெரியுமா?
ரத்த அழுத்தத்தை குறைக்கும் உணவுகள் என்னென்ன தெரியுமா?
ரத்த அழுத்தத்தை குறைக்கும் உணவுகள் குறித்து எந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
முந்திரி
முந்திரியில் நார்சத்து, கொழுப்பு சத்து, மெக்னீசியம் மற்றும் புரதசத்து நிறைந்துள்ளது. எனவே முந்திரியை பச்சையாகவோ அல்லது மருத்துவ சாப்பிடலாம். முந்திரியில் உள்ள மெக்னீசியம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
பழுப்பு நிற அரிசி
பழுப்பு நிற அரிசியில் மெக்னீசியம் அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே இது ரத்த அழுத்தத்தை குறைக்கும் பண்புள்ளது. வெள்ளை நிற அரிசிக்கு மாற்றாக பழுப்பு நிற அரிசியை பயன்படுத்தலாம்.
பீட்ரூட்
உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க பீட்ரூட் முக்கிய பங்கு வைக்கிறது. எனவே பீட்ரூட்டை ஜூஸாக செய்து அடிக்கடி குடித்து வருவதால் ரத்த அழுத்தம் எளிதில் கட்டுக்குள் வந்துவிடும்.
தேங்காய் தண்ணீர்
தேங்காய் தண்ணீரில் எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக ரத்த அழுத்தத்திற்கு தேங்காய் தண்ணீர் குடிப்பது மிகவும் ஆரோக்கியமான பானமாகும். இதில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பெரும் பங்கு வகிக்கிறது.