தோட்டத்தில் கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசமாக இருப்பதை பார்த்த கணவர்! அடுத்து நடந்தது என்ன?
husband killed his wife for illeagal sex
கள்ளக்காதல் சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. இந்த கள்ளகாதலால் நிகழும் சம்பவங்கள் மிகவும் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. ஒவ்வொருநாளும் புது புது சம்பவங்கள் ஏதாவது ஒரு மூலையில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
கர்நாடகா மாநிலத்தில் நடந்த கள்ளக்காதல் சம்பவம் பற்றிய பதிவு தான் இது.
தன் மனைவி வேறு ஒருவருடன் உல்லாசமாக இருப்பதை நேரில் பார்த்த கணவர், மனைவியின் தலையை துண்டாக வெட்டி, தலையோடு காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் தரிகெரேயில் உள்ள ஷிவானி பகுதியில் வசித்து வருபவர் சதீஷ். இவரது மனைவி ரூபா.
மேலும் அவர்களுக்கு திருமணமாகி 11 வருடங்கள் ஆகிய நிலையில், மனைவி ரூபாவுக்கு வேறு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தோட்டத்தில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
ரூபா மேல் சந்தேகமடைந்த சதீஷ், சம்பவத்தன்று தன் மனைவி தோட்டத்திற்கு தனியாக செல்வதை மறைந்திருந்து பார்த்துள்ளார். தோட்டத்திற்கு சென்ற ரூபா தனது கள்ளக்காதலனுடன் உறவில் ஈடுபட தொடங்கியுள்ளார். இதனை பின்தொடர்ந்து வந்து பார்த்துள்ளார் சதீஷ்.
சதீஷை நேரில் பார்த்த கள்ளக்காதலன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நின்ற தன் மனைவியை, ஆத்திரம் தாங்க முடியாத சதீஷ் தான் வைத்திருந்த அரிவாளால் ரூபாவின் தலையை வெட்டியுள்ளார்.
அதே இடத்தில துடிதுடித்து இறந்த மனைவியின் தலையை மட்டும் துண்டாகிய சதீஷ், அதை ஒரு துணிப்பையில் வைத்து எடுத்துகொண்டு அருகில் இருக்கும் காவல்நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது விசாரணையில் எனது மனைவி ரூபா என்னை ஏமாற்றிவிட்டாள். அவள் வேறொரு நபருடன் தொடர்பு கொண்டுள்ளாள். மேலும் தோட்டத்தில் அவனுடன் உல்லாசமாக இருப்பதை பார்த்தேன்.எனவே அவளது தலையை வெட்டி கொலை செய்துவிட்டேன். ஆனால் அவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.