கணவர்களே.! இந்த ரகசியம் தெரிஞ்சா உங்க கல்யாண வாழ்க்கை அசத்தல் தான்.!
கணவர்களே.! இந்த ரகசியம் தெரிஞ்சா உங்க கல்யாண வாழ்க்கை அசத்தல் தான்.!
இந்த காலத்தில் திருமணம் என்பது ஒரு நிகழ்ச்சி மட்டுமே. இந்த உறவு கருத்து வேறுபாட்டில் ஆரம்பமாகி விவாகரத்தில் முடிவடைகிறது. அவ்வாறு இல்லாமல், ஒவ்வொரு கணவன், மனைவியும் தன்னுடைய வாழ்க்கைத் துணையை உடலில் பாதி.! உயிரில் பாதி.! என உணர்ந்து வாழ்ந்தால் வாழும் வாழ்க்கை சொர்க்கமாக மாறும்.
சிறந்த வாழ்க்கைத் துணை என்றால் என்ன?
ஒரு சிறந்த வாழ்க்கைத் துணை என்பது உணவளிப்பதும், உடை அளிப்பதும் மட்டுமே கிடையாது. ஒரு சிறந்த வாழ்க்கைத் துணை என்பது மனதில் உள்ள எண்ணங்களை புரிந்து கொண்டு உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதே ஆகும். அதுமட்டுமல்லாமல், இந்த உறவில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழும் மனப்பான்மை இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: வாழ்க்கையில் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்..! நரகமாக மாற்றி விடும்..!
அதோடு, இந்த வாழ்க்கையில் உங்களை புரிந்து கொண்டு வாழும் ஒரு வாழ்க்கைத் துணை கிடைத்துவிட்டால் வாழ்க்கை என்னும் இந்த பயணம் நிச்சயம் வெற்றியை அடையும். மேலும், இந்த உறவில் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் மட்டுமே மகிழ்ச்சியை தராது. வாழ்க்கைத் துணையிடம் அன்பான புன்னகையுடன் ஒரு பார்வை மற்றும் ஆசையாக ஒரு வார்த்தை இது மட்டுமே உண்மையான மகிழ்ச்சியை தரும்.
குறிப்பாக, உங்களையே நம்பி வரும் உங்கள் வாழ்க்கைத் துணையை எந்த இடத்திலும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள். ஏனெனில், உங்கள் வாழ்க்கைத் துணை வெறும் உறவு மட்டுமே அல்ல. அவள் உங்கள் உயிரில் பாதி என எண்ணுங்கள்.
"தாய்க்குப் பின் தாரம் " என்பது ஒரு உத்தமமான கூற்றாகும். ஏனெனில், வயது முதிர்ந்த காலத்தில் உங்களுக்கு ஒரு தாயாக இருந்து உங்களை கவனித்துக் கொள்வது வாழ்க்கைத் துணையால் மட்டுமே முடியும். ஆகையால், உங்கள் வாழ்க்கை துணையை அன்பாகவும், அக்கறையாகவும் கவனித்துக் கொள்ளுங்கள்.