தினமும் தலைக்கு குளிக்கறீங்களா.? இந்த விஷயம் தெரிஞ்சா இனிமேல் அப்படி பண்ண மாட்டிங்க.!
தினமும் தலைக்கு குளிக்கறீங்களா.? இந்த விஷயம் தெரிஞ்சா இனிமேல் அப்படி பண்ண மாட்டிங்க.!
நம்மில் சிலர் தினமும் தலைக்கு குளிப்பது உண்டு. தலையை சுத்தமாக வைத்திருக்கவும், புத்துணர்ச்சியாக உணர்வதற்காகவும் அவ்வாறு செய்கிறோம். தினமும் தலைக்கு குளிப்பதால் முடி உதிருமா? என்ற கேள்வி நம் மனதில் எழும்.
தினமும் தலைக்கு குளிப்பதால் முடி வறட்சி அடைந்து, பொலிவிழந்து காணப்படும். கூந்தலின் பளபளப்பும் குறையும். அதிக சிக்கு மற்றும் சேதம் உண்டாகும். இதனால் உச்சந்தலையில் உள்ள ஈரப்பதம் குறைந்து அரிப்பு உருவாகும். பொடுகு பிரச்சனை அதிகரிக்கும்.
அதிகமான வியர்வை சுரப்பு உள்ளவர்கள், கடுமையான வேலை செய்பவர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள், ஈரப்பதமான தட்பவெப்ப நிலையில் வசிப்பவர்கள், வேலை நிமித்தமாக அடிக்கடி பிரயாணம் செய்கிறவர்கள் ஆகியோரது கூந்தல் மாசுபடுவதால், அவர்கள் அடிக்கடி தலைக்கு குளிக்கலாம்.