×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடக்கடவுளே.! டீ-யில் பிஸ்கட் தொட்டு சாப்பிட்டால்.. இவ்வளவு ஆபத்துகளா.?!

டீயில் பிஸ்கட் தொட்டு சாப்பிடுகிறீர்களா.? அப்படி என்றால் உடனே இதை செய்யுங்கள்.!

Advertisement

நம்மில்  பலருக்கு டீ குடிக்கும்போது பிஸ்கட் இல்லாமலிருந்தால், டீ குடித்த திருப்தியே ஏற்படாது. நாள்தோறும் டீ குடித்தாலும், அந்த டீயில் பிஸ்கட்டை நனைத்து சாப்பிடும்போதுதான் டீ சற்று சுவையாக இருக்கும் என்பது பலரின் மனநிலையாக இருக்கிறது.

ஆனாலும் டீயுடன் பிஸ்கட்டை சேர்த்து சாப்பிட்டால், உடலில் என்னென்ன விதமான ஆபத்துகள் உண்டாகும் என்பது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். பட்டர், ரீபைண்ட் ஆயில், மைதா உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுதான் இந்த பிஸ்கட்டுகள் தயாரிக்கப்படுகிறது. இவை ட்ரான்ஸ் கொழுப்பாக உருமாறி, உடலில் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை உண்டாக்கும்.

ஆகவே பிஸ்கட்டை காபி, டீ போன்றவற்றுடன் சேர்த்து உட்கொண்டால், இரத்த குழாய்களில் கெட்ட கொழுப்புகள் சேர்ந்து, கார்டியோ வாஸ்குலர் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பிருக்கிறது. அதே போல உப்பு பிஸ்கட்டை அதிகமாக சாப்பிட்டால், உடலுக்கு இதன் காரணமாக, பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம்.

அதேபோல இந்த பிஸ்கட்டில் சேர்க்கப்படும் ஒருவித மாவு, எண்ணெய் போன்றவை உடலுக்கு மிக மோசமான தீங்கை ஏற்படுத்தும். அதோடு உப்பை அதிகமாக சேர்க்கும் பிஸ்கட்டை உட்கொண்டால்,  இரத்த அழுத்தத்தில் மாற்றம் உண்டாகும். உயர் ரத்த அழுத்தத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்பிருக்கிறது. இதன் காரணமாக, பக்கவாத நோய் கூட உண்டாகும். டீ மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட இரண்டிலும் இருக்கும் சர்க்கரை ஒன்றாக சேர்ந்தால், சருமத்தில் சீபம் என்ற சுரப்பு ஏற்படும்.

நம்முடைய சருமத்தில் இந்த சுரப்பு  அதிகரித்தால், முகத்தில் அதிகமாக பருக்கள் உண்டாகும். இப்படி தொடர்ந்து நாம் சாப்பிட்டு வந்தால், அந்த பருக்கள் அப்படியே அமுங்கி கரும்புள்ளிகளாக மாறக்கூடும். நாள்தோறும் பிஸ்கட் சாப்பிடுவது அல்லது டீயில் பிஸ்கட்டை நனைத்து உட்கொள்வது போன்றவை உடல் ஆரோக்கியத்தையும் ஜீரண பாதிப்பையும் உண்டாக்கும்.

நாம் இதனை தொடர்ந்து செய்து வந்தால், வயிற்றுப்போக்கு அஜீரண கோளாறு போன்றவை ஏற்படும். பிஸ்கட்டுகளில் கார்போஹைட்ரேட், கொழுப்பு ஆகியவை இருப்பதால், அவை ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவையும் பாதிக்கும். கிளைசெமிக் என்ற குறியீடு பிஸ்கட்டில் அதிகமாக இருப்பதால், இது ரத்தத்தின் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். பிஸ்கட்டிலுள்ள மாவு பொருட்கள், கொழுப்பு, சர்க்கரை போன்றவை இயற்கையாகவே உடலிலிருக்கின்ற தண்ணீரை அதிகமாகவே உறிஞ்சி விடும்.

அத்துடன் இவை ஜீரண மண்டலம் மற்றும் குடல் ஆகியவற்றில் இன்ஃப்ளமேஷன்கள் மற்றும் அழர்ச்சியை உண்டாக்கும். பிஸ்கட்களிலுள்ள கார்போஹைட்ரேட், கொழுப்பு போன்றவை ஒன்றிணைந்து, ஜீரண ஆற்றலை முற்றிலுமாக பாதித்துவிடும்.

நாள்தோறும் டீ மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட இரண்டையும் நாம் சேர்த்து சாப்பிட்டு வந்தால், அது மலச்சிக்கலை உண்டாக்கும். நாள்தோறும் டீயில் பிஸ்கட்டுகளை தொட்டு சாப்பிட்டு வருபவர்களுக்கு வேகமாக உடல் எடை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

 ஆகவே இதில் சர்க்கரை, கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளிட்டவை அதிகமாக இருக்கிறது. இதை தவிர்த்து நார்ச்சத்தோ அல்லது வேறு ஏதாவது ஊட்டச்சத்துகளோ இல்லை என்பதால், உடல் எடை வேகமாக அதிகரிக்கும் அபாயமுண்டு.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tea #Biscuts #Life style #fat #Cholostrol
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story