மன அழுத்தத்தை குறைக்க வேண்டுமா.. ஜப்பானியர்களின் இந்த எட்டு பழக்கத்தை ட்ரை பண்ணி பாருங்க.?!
மன அழுத்தத்தை குறைக்க வேண்டுமா.. ஜப்பானியர்களின் இந்த எட்டு பழக்கத்தை ட்ரை பண்ணி பாருங்க.?!
மன அழுத்தம்
பொதுவாக தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் மன அழுத்தம் என்பது பள்ளி படிக்கும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலருக்கும் இருந்து வருகிறது. மன அழுத்தத்தை குறைப்பதற்கு பலவிதமான பயிற்சிகளும், யோகா முறைகளும், மருந்துகளும் இருந்து வந்தாலும் இது எளிதாக மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக இல்லை என்பதால் பலரும் பலவிதமான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். ஆனால் ஜப்பானியர்கள் இந்த எட்டு வழிகளை பின்பற்றுவதன் மூலம் எளிதாக மன அழுத்தத்தை குறைக்கின்றனர். இதைப்பற்றி பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?
வனகுளியல் - காடுகள் நிறைந்த வனத்தில் குளியல் செய்யும்போது மன அழுத்தம் வேகமாக குறைகிறது.
மூச்சுப்பயிற்சி - பொதுவாக யோகா பயிற்சியில் மூச்சுப் பயிற்சி என்பது பலவகையாக நோய்களை குணப்படுத்துவதாக நம்பப்பட்டு வருகிறது. இவ்வாறு தினமும் தூங்க செல்வதற்கு முன்பாகவும், காலையில் எழுந்த பின்பும் மூச்சு பயிற்சி செய்து வந்தால் மன அழுத்தம் விரைவாக குறையும்.
நடைப்பயிற்சி - வேக வேகமாகவோ அல்லது மிகவும் மெதுவாகவோ நடக்காமல் அடிமேல் அடி எடுத்து வைத்து தினமும் காலையில் நடைபயிற்சி செய்து வந்தால் மன அழுத்தம் குறையும்.
மாச்சா டீ - இது ஒரு வகை கிரீன் டீ ஆகும். கிரீன் டீ இலைகள் மற்றும் சில மூலிகைகளை சேர்த்து செய்யப்படும் மாச்சா டீ செய்து குடிக்கும்போது மன அழுத்தம் குறைகிறது.
மலர்கள் - வாசனை நிறைந்த மலர்களை அலங்கரித்து படுக்கையறையில் வைப்பதன் மூலம் மன அழுத்தம் குறையும்.
அக்குபிரசர் - இந்த சிகிச்சை முறையை செய்வதால் மன அழுத்தம் குறைவதாக ஜப்பானியர்கள் நம்பி வருகின்றனர்.
சூடான குளியல் - மன அழுத்தத்தில் தூக்கமின்மை பிரச்சனை ஏற்பட்டால் இந்த குளியல் முறையை பின்பற்றுவதன் மூலம் மன அழுத்தம் குறையும்.
காடுகளில் தியானம் செய்வது - காடுகள் அல்லது மரங்களுக்கு நடுவில் அமர்ந்து தியானம் செய்வதன் மூலம் சுத்தமான இயற்கை காற்று கிடைக்கும். இதன் மூலம் மன அழுத்தம் நம்மை விட்டு நீங்கும். இது போன்ற வழிமுறைகளை பயன்படுத்தி ஜப்பானியர்கள் மன அழுத்தத்தை குறைத்து வருகின்றனர்.