உடலுக்கு நன்மையை வாரி வழங்கும் சத்துள்ள கம்பு இடியாப்பம் செய்வது எப்படி?..!
உடலுக்கு நன்மையை வாரி வழங்கும் சத்துள்ள கம்பு இடியாப்பம் செய்வது எப்படி?..!
எலும்பை வலுப்படுத்தும் கம்பு இடியாப்பம் தயாரிக்கும் முறை பற்றி தற்போது காண்போம்.
அரிசியை விடவும் 8 மடங்கு அதிகமாக கம்பில் இரும்புச்சத்து இருக்கின்றது. அத்துடன் கால்சியம், புரதம், இரும்பு, உயிர்ச்சத்து என அனைத்து சத்துக்களும் அதிகமாக கொண்ட ஒரே தானியம் கம்பு தான். வாரத்தில் இருமுறை கம்பு உண்பதன் மூலமாக உடல் எடையை குறைக்கவும், எலும்பை வலுப்படுத்தும் உதவுகிறது.
தேவையான பொருட்கள் :
ஏலக்காய் பொடி - சிறிதளவு
நெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
கம்பு - 1 கப்
தேங்காய்த் துருவல் - 1 கப்
வெல்லத் துருவல் - 1 கப்
செய்முறை :
★முதலில் கம்பு மாவில் தண்ணீர், உப்பு சேர்த்து பிசைய வேண்டும்
★அடுத்து இடியாப்ப அச்சில் கம்பு மாவை போட்டு 15 நிமிடம் இடியாப்ப மாவை பிழிந்து, ஆவியில் வேக வைக்க வேண்டும்.
★பின் வெந்த கம்பு மாவில் தேங்காய் துருவல், நெய், வெல்லத் துருவல் ஆகியவற்றை சேர்த்து கிளறி பரிமாறினால் கம்பு இடியாப்பம் தயாராகிவிடும்.
★வெல்லம் சேர்க்க விரும்பாதவர்கள் வெந்த இடியாப்பத்துடன், குருமா அல்லது சட்னி சேர்த்தும் சாப்பிடலாம்.