"கேரளா ஸ்டைலில் உருளைக்கிழங்கு ரோஸ்ட் செய்வது எப்படி?!"
கேரளா ஸ்டைலில் உருளைக்கிழங்கு ரோஸ்ட் செய்வது எப்படி?!
அடிப்படையில் சிக்கன் சுவையில் இருப்பதால் நம்மில் பெரும்பாலானோருக்கு உருளைக்கிழங்கில் சமைத்த உணவுகள் என்றால் மிகவும் பிடிக்கும். இந்த உருளைக்கிழங்கில் பொரியல், பஜ்ஜி, குருமா என்று பலவிதமாக சமைத்து உண்டாலும், இதில் செய்யும் ரோஸ்ட் அதிக சுவையுடன் இருக்கும்.
கேரள மக்களின் பேவரைட் உணவுகளில் ஒன்றாக இருக்கும் இந்த உருளைக்கிழங்கு ரோஸ்ட்டை கேரள ஸ்டைலில் எப்படி செய்வது என்று இங்கு பார்ப்போம். இரண்டு பெரிய உருளைக்கிழங்கை எடுத்து தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும்.
இதை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவிடவும். பெரிய வெங்காயம், இஞ்சி பூண்டு, தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பின்னர் வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, இஞ்சி-பூண்டு துண்டுகள், தக்காளி, கருவேப்பிலை போட்டு வதக்கவும்.
பின்னர் மிளகாய்த்தூள், கரம் மசலாத்தூள், மஞ்சள் தூள், பச்சை மிளகாய் சேர்த்து வாசனை போகும்வரை வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பின்னர் வேகவைத்த உருளைக்கிழங்குகளை சேர்த்து கிளறி, தேவைப்பட்டால் உப்பு சேர்த்து நன்கு வறுத்தால் அட்டகாசமான உருளைக்கிழங்கு ரோஸ்ட் ரெடி.