அதிர்ச்சி.! சரும அழகிற்காக இந்த கிரீம்களை பயன்படுத்துறீங்களா.?சிறுநீரக பிரச்சனை ஏற்படும் தெரியுமா.!?
அதிர்ச்சி.! சரும அழகிற்காக இந்த கிரீம்களை பயன்படுத்துறீங்களா.?சிறுநீரக பிரச்சனை ஏற்படும் தெரியுமா.!?
தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பெண்கள், ஆண்கள் என அனைவருமே அழகிற்காக பல கிரீம்களையும் மேக்கப் உபகரணங்களையும் பயன்படுத்தி வருகின்றனர். இதில் சன் க்ரீம், ஸ்கின் கிரீம், பவுண்டேஷன் என அதிகமாக அழகு சாதன பொருட்களை முகத்திற்கும் உடலிற்க்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த அழகு சாதன பொருட்கள் பல நோய்களை ஏற்படுத்துவதாகவும், குறிப்பாக சிறுநீரக பிரச்சனையை ஏற்படுத்துவதாகவும் ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. இதை குறித்து விளக்கமாக பார்க்கலாம்?
குறிப்பாக சருமத்தில் பயன்படுத்தப்படும் கிரீம்களில் அதிகளவு மெர்குரி நிறைந்திருப்பதால், இது நம் தோளில் உள்ள சிறு சிறு துளைகளில் நுழைந்து ரத்தத்தின் மூலம் சிறுநீரகத்தில் சேருகிறது. இதனால் சிறுநீரக பாதிப்பு உருவாகிறது. மேலும் சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் Membranous Nephropathy என்ற நோயையும் உருவாக்குகிறது.
Membranous Nephropathy இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால் உடலில் இருந்து அதிக அளவு புரதம் வெளியேறி சிறுநீரக பாதிப்பு ஏற்படும். இந்த நோய் பாதிப்பு உள்ள 50 பேரை வைத்து ஆய்வு நடத்தியதில் இந்த அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகி உள்ளது. இதில் பாதி பேர் சரும அழகிற்காக கிரீம்களை உபயோகிக்கக்கூடிய நபர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காலகட்டத்தில் இந்த நிலை பெருகினால் இது ஒரு அபாயகரமான சூழ்நிலையாக உருவாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். அழகுக்காக பயன்படுத்தப்படும் கிரீம்களில் இப்படி ஒரு ஆபத்து ஒளிந்திருப்பதை மக்கள் விழிப்புணர்வுடன் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.