ஹய்யா.! குட்டீஸ்க்கு பிடித்த வெரைட்டி தக்காளி தோசை.! சிம்பிள் & டேஸ்ட்டி ரெசிபி.!
ஹய்யா.! குட்டீஸ்க்கு பிடித்த வெரைட்டி தக்காளி தோசை.! சிம்பிள் & டேஸ்ட்டி ரெசிபி.!
தோசை தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும். குறிப்பாக காலை உணவாக பெரும்பாலான தமிழர்களால் உண்ணப்படும் உணவுகளில் மிக முக்கியமானது தோசை. குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு இது. பொதுவாக நாம் தோசையில் பல வெரைட்டி கேள்விப்பட்டிருப்போம். சுவையான மற்றும் எளிமையான தக்காளி தோசை எப்படி செய்வது என்று இந்த பதிவில் காணலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவாகும்.
தேவையான பொருட்கள்: 5 தக்காளி, 1 பெரிய வெங்காயம், 6 வர மிளகாய், 4 பல் பூண்டு, 50 கி உளுந்து, 1 டீஸ்பூன் வெந்தயம், 250 g இட்லி அரிசி, உப்பு தேவையான அளவு, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் உளுந்து, இட்லி அரிசி, வெந்தயம் சேர்த்து நன்கு அலசிய பின் தண்ணீர் ஊற்றி 6 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். அரிசி நன்கு ஊறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு நன்கு அரைத்துக் கொள்ளவும். மாவை 8 மணி நேரம் வரை அப்படியே வைத்து விடவும். இதன் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயம், தக்காளி, பூண்டு, வர மிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.