Kitchen Tips: மாவு பூச்சி பிடிச்சு கெட்டுபோகுதா?.. அப்போ இதை ட்ரை பண்ணுங்க.. வெகுநாள் கெடாமல் இருக்கும்..!
Kitchen Tips: மாவு பூச்சி பிடிச்சு கெட்டுபோகுதா?.. அப்போ இதை ட்ரை பண்ணுங்க.. வெகுநாள் கெடாமல் இருக்கும்..!
நாம் தினமும் சமைப்பதற்கு அரிசி மாவு, கோதுமை மாவு போன்றவற்றை உபயோகிப்போம். ஆனால் சில நேரத்தில் மாவுகளில் பூச்சு பிடிக்கும். இன்று உலர் மாவு கெடாமல் பாதுகாத்து வைக்கும் வழிமுறைகள் குறித்து காணலாம்.
பொதுவாக பூச்சிகள் வரும் பிரச்சனை அதிகளவு இருப்பதால் அதை தடுக்க மாவை காற்று புகாத பாத்திரத்தில் இறுக்கமாக மூடி வைக்கலாம். மாவை பிளாஸ்டிக் பைகளில் போட்டு குளிரான பகுதிகளில் பத்திரப்படுத்தி வைக்கலாம். இதன்மூலம் பூச்சிகள் அவற்றில் எளிதில் நுழைய முடியாது.
மேலும் மஞ்சள் மற்றும் இஞ்சி ஆகியவற்றை மாவு வைத்திருக்கும் பாத்திரத்தில் சேர்த்து வைத்தால் பூச்சிகள் வராது. பிரியாணி இலைகளை மாவு உள்ள பாத்திரத்தில் வைக்கலாம் அல்லது மாவு இருக்கும் பாத்திரத்தை சுற்றிலும் கிராம்பு பொடி தூவலாம்.