அட அட.. நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையான கோவைக்காய் சப்ஜி..! இன்றே செய்து அசத்துங்கள்..!!
அட அட.. நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையான கோவைக்காய் சப்ஜி..! இன்றே செய்து அசத்துங்கள்..!!
வாரத்திற்கு இரண்டு முறை கோவைக்காய் எடுத்துக்கொள்வது உடலில் செரிமான கோளாறுகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளும். மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும். இதயநோய் அபாயத்தை குறைக்கும். இன்று கோவைகாயில் சப்பாத்திக்கு அருமையான சப்ஜி செய்வது எப்படி என்று காணலாம்.
தேவையான பொருட்கள் :
கோவைக்காய் - ஒன்று
தக்காளி - மூன்று
தனியாதூள் - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி, சீரகம், மிளகாய் தூள் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
கரம் மசாலா - சிறிதளவு
முந்திரி பருப்பு - ஆறு
மஞ்சள் தூள் - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய் - சிறிதளவு
செய்முறை :
★முதலில் எடுத்துக்கொண்ட கோவைக்காயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ள வேண்டும்.
★பின் பாத்திரத்தில் வெந்நீர் சேர்த்து சிறிதளவு உப்பு போட்டு கோவைக்காயை வேகவைத்து வடிகட்டி எடுக்கவும்.
★வடிகட்டிய அந்த நீரில் தக்காளியை வேகவைத்து தோலை மிக்சியில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
★அடுத்து தேங்காயை ஊறவைத்த பின்னர் முந்திரி பருப்பை சேர்த்து அரைத்து அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வேகவைத்த கோவைக்காயை வறுத்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
★அந்த கடாயில் சிறிதளவு சீரகம், தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து தக்காளியின் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட வேண்டும்.
★இதில் வறுத்த கோவைக்காய், தனியாத்தூள் ஆகியவற்றை சேர்த்து இரண்டு நிமிடங்கள் கிளறி இறுதியாக அரைத்த தேங்காய் சேர்த்து கரம் மசாலா சேர்த்தால் சப்பாத்திக்கான சப்ஜி தயார்.