ரத்தசோகை, மலச்சிக்கல் பிரச்சனைக்கு குட் பை... வெண்டைக்காய் பக்கோடா செய்து அசத்துங்கள்.!
ரத்தசோகை, மலச்சிக்கல் பிரச்சனைக்கு குட் பை... வெண்டைக்காய் பக்கோடா செய்து அசத்துங்கள்.!
உடலுக்கு நன்மையளிக்கும் வெண்டைக்காய் பக்கோடா எவ்வாறு செய்வது என்பதை தற்போது காணலாம்.
வெண்டைக்காயில் வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. மேலும், ரத்தசோகை, மலச்சிக்கல், புற்றுநோய், கொலஸ்ட்ரால், வயிற்றுப்புண், நீரிழிவு நோய் போன்றவற்றை சரி செய்வதற்கும் வெண்டைக்காய் சிறந்த மருந்தாக உள்ளது.
தேவையான பொருட்கள் :
எண்ணெய் - தேவைக்கேற்ப
கருவேப்பிலை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 5
பூண்டுப்பல் - 5
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
முந்திரிபருப்பு - 10
மல்லித்தூள் -1 தேக்கரண்டி
சோள மாவு - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மைதா மாவு - 1 தேக்கரண்டி
கடலை மாவு -2 தேக்கரண்டி
அரிசி மாவு -2 தேக்கரண்டி
சீரகத்தூள் -அரை தேக்கரண்டி
கரம் மசாலா -அரை தேக்கரண்டி
செய்முறை :
★முதலில் வெண்டைக்காயை முழுவதுமாக சுத்தம் செய்து, சற்று பெரிய துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
★அடுத்து முந்திரி பருப்பினை அரை மணிநேரம் நீரில் ஊற வைக்க வேண்டும்.
★பின் ஒரு அகலமான பாத்திரத்தில் மிளகாய்த்தூள், கரம்மசாலா, மஞ்சள்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள் ,உப்பு போன்றவற்றை சேர்த்து அதில் சில துளிகள் நீரை சேர்த்து கலந்து எடுத்துக் கொள்ளவும்.
★மேலும், தட்டி எடுத்த பூண்டுப்பல் மற்றும் கருவேப்பிலை, இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய், நீரில் ஊறவைத்து வடிகட்டிய முந்திரி ஆகியவற்றை கடலை மாவு, சோள மாவு, அரிசி மாவு, மைதா மாவுடன் சேர்த்து பிசைய வேண்டும்.
★மசாலா சீராக அனைத்திலும் கலக்கும் வரை மென்மையாக பிசைந்து, அதன் பின் நறுக்கிய வெண்டைக்காயை இதில் பிரட்டி எண்ணெயில் போட்டு, மிதமான சூட்டில் பொன்னிறமாக வறுத்து எடுத்தால் அருமையான வெண்டைக்காய் பக்கோடா சில நிமிடங்களில் தயாராகிவிடும்.