அடேங்கப்பா! காதலர் தினத்தை முன்னிட்டு இறக்குமதி செய்யப்படும் ரோஜா பூக்கள்!
Lot of rose importat from nepal for valentines day
காதலர்கள் கொண்டாடும் காதலர் தினம் ஒவொரு வருடமும் பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தவருட காதலர் தினத்திற்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ளன.
காதலர் தினம் என்றாலே அதில் முக்கிய பங்கு வகிப்பது ரோஜா பூக்கள்தான். புதிதாக காதலை சொல்ல தயாராகும் நபர் இந்த ரோஜாப்பூவை கொடுத்துதான் தனது காதலை வெளிப்படுத்துகிறார்.
இந்நிலையில் ரோஜா பூக்கள் விற்பனை படுஜோராக உள்ளது. இந்நிலையில், நேபாள தலைநகர் காதமண்டில் இருந்து 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரோஜாக்கள் கொல்கத்தா, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் உற்பத்தியான பலவகையான ரோஜாக்கள் இந்திய முழுவதும் இறக்குமதி செய்யப்பட்டதுடன் வெளிநாடுகளும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.