"செரிமானக் கோளாறுக்கு அருமருந்தாகும் லிச்சி பழம்!"
செரிமானக் கோளாறுக்கு அருமருந்தாகும் லிச்சி பழம்!
வயிறு சம்மந்தப்பட்ட கோளாறு உள்ளவர்கள் அதிகளவு எடுத்துக்கொள்ளவேண்டிய ஒரு பழம் தான் லிச்சிப்பழம். இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. மேலும் இது உடலை குளிர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
இதில் உள்ள வைட்டமின் சி இரும்புச்சத்தை உறிஞ்சி சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரித்தது. எனவே ரத்தசோகை உள்ளவர்கள் இந்தப் பழத்தை தேடி உட்கொண்டு வருவது நல்லது. மேலும் இதிலுள்ள அதிகப்படியான நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து ஆகியவை உடலில் உள்ள கொழுப்பை குறைக்கின்றன.
இதில் புற்றுநோய் எதிர்ப்புக்கான ஆன்டி ஆக்சிடென்ட்கள் உள்ளன. மேலும் இந்தப்பழம் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். மேலும் இது சூரிய ஒளியால் ஏற்படும் சரும எரிச்சலுக்கும் அருமருந்துகிறது. இந்தப் பழத்தை பெண்கள் அதிகமாக சாப்பிட்டு வருதல் நலம்.
மேலும் லிச்சிப் பழத்தின் விதையை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சாலட்டிலும், யோகர்ட்டிலும் தூவி சாப்பிடலாம். அதே நேரம் அளவுக்கதிகமாகவும் இந்த லிச்சிப்பொடியை எடுத்துக்கொள்ளக் கூடாது.