சளி, இருமலை தடுக்கும் மிளகு-கறிவேப்பில்லை சாதம் செய்வது எப்படி.!
சளி, இருமலை தடுக்கும் மிளகு-கறிவேப்பில்லை சாதம் செய்வது எப்படி.!
இருமல், சளி தொடர்பான பிரச்சனை உள்ளவர்களுக்கு நன்மை தரும் கருவேப்பிலை மிளகு சாதத்தை இன்று வீட்டில் எப்படி செய்வது என்பது குறித்து காணலாம்.
தேவையான பொருட்கள் :
சாதம் - ஒரு கிண்ணம்
கருவேப்பிலை - ஒரு கிண்ணம்
வறுத்த வேர்க்கடலை - தேவைக்கேற்ப மிளகு - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
நெய் - 2 தேக்கரண்டி
கல் உப்பு - தேவையான அளவு
கடுகு - அரை தேக்கரண்டி கருவேப்பிலை - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - மூன்று
செய்முறை :
★முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து மிளகு சேர்த்து அடுப்பை குறைவான தீயில் வைத்து கருகிவிடாதபடி வறுக்க வேண்டும்.
★கருவேப்பிலையை தனியாக வறுத்து எடுத்துவைத்துக் கொள்ளுங்கள். பெருங்காயத்தை சிறிதளவு எண்ணெய் சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
★அதேபோல வேர்க்கடலையையும் வறுக்க வேண்டும். இவை அனைத்தும் நிறம் மாறியதும் மிக்ஸியில் சேர்த்து அரைக்க வேண்டும்.
★பின் நெய்விட்டு கடுகு, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து சாதத்தில் இட்டு சூடாக சாப்பிடும் பட்சத்தில் இருமல் நிற்கும் பசியையும் நன்கு தூண்டும்.